ஒரு கையளவு காட்டன் துணியை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் பவுடர் உப்பை சேர்த்து அதை நன்கு இறுக்கமாக நூல் கொண்டு கட்டிக்கொள்ள வேண்டும். இதை கோதுமை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தில் கோதுமை மாவின் நடுவில் போட்டு வழக்கம் போல் மாவை மூடி வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் ஆறு மாதம் ஆனாலும் கோதுமை மாவு கெடாமல் இருக்கும்.
அயர்ன் பாக்ஸில் ஏராளமான கறைகள் இருக்கும். இதனால் நாம் துணி அயர்ன் செய்யும் போது அந்த துணியில் கறை படிய வாய்ப்பு உள்ளது. அப்பப்பட்ட கறையை சில நிமிடங்களில் எளிமையாக போக்கி விடலாம். அதற்கு பிறந்த நாள் கேக்கில் வைக்க பயன்படுத்தும் சிறு சிறு மெழுகுவர்த்திகள் 5 எடுத்துக் கொள்ள வேண்டும். அயர்ன் பாக்ஸை இரண்டு நிமிடம் ஆன்(on) செய்து பின் ஸ்விட்சை ஆப்(off) செய்து விட வேண்டும். இப்போது இரண்டு மெழுகு வர்த்திகளை எடுத்து அயர்ன் பாக்ஸின் அயர்ன் செய்யும் பகுதியில் வைக்க வேண்டும்( கையை சுட்டுக்கொள்ளாமல் கவனமாக வைக்க வேண்டும்) .
இப்போது சில நொடிகளில் மெழுகு உறுகியதும் ஒரு கரண்டியை வைத்து அயர்ன் பாக்ஸ் முழுவதும் பரப்பி விட வேண்டும். இப்போது ஒரு காட்டன் துணியை வைத்து அந்த மெழுகை துடைத்து எடுத்து விட வேண்டும். ( துடைக்கும் போது கையை சுட்டுக் கொள்ளாமல் கவனமாக துடைக்க வேண்டும். அதற்கு சற்று அதிக அளவிளான துணியை பயன்படுத்தி துடைக்கலாம்) பின் மீண்டும் இரண்டு அல்லது 3 மெழுகு வர்த்திகளை அயர்ன் பாக்ஸின் மீது வைத்து மீண்டும் துணியால் அதை அழுத்தி துடைத்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் அயர்பாக்ஸில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கி இருக்கும்.
50 மிலி அளவு பாமாயிலை கடாயில் சேர்த்து அதை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் 15 கொத்து வேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது வேப்பிலை நன்கு வெடிக்க ஆரம்பிக்கும். சற்று தூரமாக நிற்பது நல்லது. இல்லையென்றால் மூடி வைத்து விடலாம். எண்ணெயின் சத்தம் அடங்கியதும் மூடியை திறந்து வேப்பில்லையை மட்டும் எண்ணெயில் இருந்து எடுத்து விட வேண்டும். இதை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் 3 கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பாச்சா உருண்டையை (அந்துருண்டை) உடைத்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். வீட்டில், இந்த எண்ணெயை ஒரு அகலில் ஊற்றி விளக்கேற்றி வைத்தால் கொசுக்கள் வரவே வராது. குறிப்பாக மாலை நேரத்தில் வைப்பது ஏற்றதாக இருக்கும்.