Hug Day 2023 : ஹக் டேவை தொடர்ந்து நாளை முத்த தினமும், பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமும் கொண்டாடப்படுகிறது.


பிப்ரவரி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடுவதற்கு முன் அந்த வாரம் முழுவதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தில் காதலர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட், பூக்கள், க்ரீட்டிங் கார்டு போன்ற பரிசுகளை பரிமாரிக்கொள்வர்.


ஆனால், காதலர் தினம் ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. காதலர் தினத்திற்கு முன்பு, ரோஸ் டே, ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே மற்றும் கிஸ் டே போன்றவற்றை கொண்டாடுவார்கள். மேலும் அன்பின் நாட்காட்டியில் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நாளும் தனித்துவமான முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. 


ஹக் டே


பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டே என கொண்டாடப்படுகிறது. அணைப்புகள் அன்பின் உலகளாவிய மொழியாகக் கருதப்படுகிறது. ஒருவர் மீது அன்பை வெளிப்படுத்தும் விதமான கட்டி அணைத்தல் என்பது காலகாலமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கட்டிப்பிடிப்பதில் பல அர்த்தங்கள் இருக்கலாம். அது நீங்கள் விரும்பும் ஒருவரைக் கட்டிப்பிடிப்பது, ஆறுதலளிக்கும் அரவணைப்பு, யாரையாவது வாழ்த்தும்போது கட்டிப்பிடிப்பது அல்லது விடைபெறுவதற்கான அணைப்பு.


மேலும், கட்டிப்பிடிப்பது ஒருவருக்கு எந்த பிரச்சனையிலிருந்தும் நிவாரணம் தருவதுடன் மனதை புத்துணர்ச்சியடையச் செய்யும். இரண்டு பேரை ஒருவரைக்யொருவர் கட்டிப்பிடிக்கும்போது, நமக்கு மன அழுத்தம் குறைவதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், நாம் நேசிப்பவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் அவர் மீதுள்ள அன்பும், நம்பிக்கையும் இன்னும் அதிகமாகும்.


அத்தகைய சூழ்நிலையில், இந்த சிறப்பு நாளில் நீங்கம் மிகவும் விரும்பும் நபர்களை கட்டிப்பிடிக்க மறக்காதீர்கள். முத்த தினத்திற்கு முன் வரும் இந்த அணைப்பு நாள், தம்பதியினருக்கான காதலை படிப்படியாக முன்னெடுத்து செல்வதற்கான ஒரு படியாகும் என்று நம்பப்படுகிறது.


நன்மைகள்


ஒருவரைக்கொருவர் கட்டிப்பிடிக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது; ஒருவருக்கு இருக்கும் பிணைப்பை அதிகரிக்கிறது; உறவுகளில் நேர்மறை மற்றும் இனிமையைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மன அழுதத்தை குறைத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பிற நன்மைகளுக்கும் வழிவகுக்கிறது. 


மேலும் கட்டிப்பிடிப்பது மூளையில் ஆக்ஸிடாசினை உருவாக்குகிறது. இது மகிழ்ச்சிக்கு காரணமான ஒரு வேதிப்பொருள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாழ்த்துக்கள்


இறுக்கமான அணைப்பு அன்பின் மொழி. ஒருவரை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்ல இதுவே சிறந்த வழியாகும். இனிய அணைப்பு நாள்!


என் அன்பே உனக்காக ஒரு சிறப்பு பரிசு உள்ளது. ஆனால் அதை அளிப்பதற்கு நான் உன் கைகளை கடன் வாங்க வேண்டும்..!


நிறைய அன்பு, அக்கறை மற்றும் புன்னகையுடன் ஒரு அன்பான அரவணைப்பு..!


என் அன்பான காதலனுக்கு ஒரு அழகான அணைப்பு! நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னை என்றென்றும் என் கைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்...!