சுற்றுலா பயணத்தின் போது மோசடிகளை தவிர்க்கவேண்டிய வழிகள்:
சுற்றுலா பயணத்தின்போது மோசடிகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை வழிகைகளை காணலாம்.இவ்வுலகில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் உள்ளனர்? அனைவருமே ஒரு காலத்தில் பயணம் செய்திருப்போம் அல்லது பயணம் செய்ய தள்ளப்படுவோம். சிலருக்கு குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் இருக்கும்; சிலருக்கு நண்பர்களுடன்; சிலருக்கு தனியாக பயணம் செய்ய விருப்பம் இருக்கும். பயணம் தொடர்பான எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.
திட்டமிடுதல்:
சிலர் கடைசி நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் பயணத்தை ரத்து செய்வார்கள் . அதனால் முன்கூட்டியே பயணம் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். பயணத்தை முன்கூட்டியே திட்டம் இட வேண்டும்.பேருந்து மற்றும் தங்கும் விடுதிகளை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதனால் பயணத்தின்போது குழப்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக பயணத்தை கழிக்கலாம்.
டூர் பேக்கேஜ் மோசடி
பயணம் முழுவதும் எந்த சிக்கல்களும் ஏற்படாதவாறு சுற்றுலா தொகுப்புகளை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.தேர்ந்தெடுக்கும் போது தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு பயண தொகுப்பை முன்பதிவு செய்யும்போது, முதலில் நிறுவனத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தகவல்களையும் தெரிந்துகொண்டு பதிவு செய்யவும். கூடுதல் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு ஏமாறுவதை தவிர்க்கவும்.
பேருந்து மோசடி
பயணத்தின்போது பேருந்தில் செல்வதாக இருந்தால், அந்த பேருந்து தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளவும் , ஏனென்றால் பேருந்து பயணம் சரியாக அமையவில்லை எனில் அது உங்களது பயணத்தின் மகிழ்ச்சியான தருணங்களை மாற்றக்கூடும்
டாக்சி மோசடி
பயணத்தின்போது பலரும் டாக்சி மோசடிக்கு உள்ளாகின்றனர். சில இடங்களில் உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளிடம் கூடுதல் பணம் வசூலிக்கிறார்கள். மேலும் பல டாக்ஸி ஓட்டுநர்கள் , அவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்த இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.அதனால் டாக்சியில் செல்ல விரும்பினால் ,நீங்கள் செல்ல விரும்பும் இடம் குறித்து ஓட்டுநர்களிடம் தெளிவாகக் கூறி விடுங்கள்.
உள்ளூர் மக்கள்
சில நேரங்களில், பயணத்தின் போது, உள்ளூர்வாசிகள் உங்களை நன்றாக நடத்துவது போன்று இருக்கும். அவர்கள் உங்களை நன்றாக நடத்துவது போன்று பழகி அவர்களுக்கு தெரிந்த தங்கும் விடுதிகளில் தங்க வைக்க முற்படுவார்கள். மேலும் நல்லவர்கள் போன்று நன்றாக பழகி , உங்களிடம் அதிகம் பணம் பறிக்க முற்படுவர். மேலும் சிலர் உங்களிடம் உள்ள உடைமைகளை திருட அல்லது பறிக்க முற்படலாம். அதனால் இதுபோன்ற நபர்களை தவிர்ப்பது நல்லது.யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தினால், உடனே காவல்துறையை அணுகுவது நல்லது.