பருவமழைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் நம் உடம்பில் சொல்லிக் கொள்ளாமல் ஏகப்பட்ட பாதிப்புகள் வந்து சேர்ந்து விடும். இவை எதையும் நாம் சாதாரணமாக எடுத்து விட முடியாது. அப்படியான ஒரு பிரச்னை தான் மழைக்காலத்தில் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் அதனால் உண்டாகும் வாய் துர்நாற்றம். இதை நீங்கள் நிறைய முறை கவனித்திருக்கலாம். கடந்தும் போயிருக்கலாம். ஆனால் இது பருவமழைக்காலத்தில் ஏற்படும் தற்செயலான நிகழ்வு கிடையாது. 

Continues below advertisement

பருவமழையே நேரடியாக ஈறு நோயையோ அல்லது வாய் துர்நாற்றத்தையோ ஏற்படுத்தாவிட்டாலும், பருவகால வாழ்க்கைமுறை மாற்றங்கள் அதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும்  என மருத்துவர் ஜெயினீல் பரேக் தெரிவித்துள்ளார். 

இந்த மாற்றமானது நம் வாய் பகுதியில்  பாக்டீரியாக்கள் பெருகுவதை ஊக்குவித்து ஈறு அழற்சி மற்றும் வாய் துர்நாற்றம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரிக்கிறார். 

Continues below advertisement

என்ன காரணம்?

பருவமழைக் காலத்தில் மக்கள் பெரும்பாலும் அதிக சர்க்கரையுள்ள தின்பண்டங்களையும் பானங்களையும் உட்கொள்கிறார்கள். அதேசமயம் மழைக்காலத்தில் நாம் குறைவாக தண்ணீர் அருந்துகிறோம். இப்படியான நம்மை அறியாமலேயே  வாய் சுகாதாரப் பழக்கவழக்கங்களில் நாம் பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. 

இதன் காரணமாக நம் உடம்பில் நீர்ச்சத்து குறைகிறது. பற்கறையை முறையாக அகற்றாததால் பாக்டீரியாக்கள் பெருகி வாய் துர்நாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. 

என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?

வழக்கமான பல் துலக்குதல் மற்றும் வாய் கொப்பளித்தல் மூலம் பல்லில் சிக்கியுள்ள உணவுத்துணுக்குகள் நீக்கப்படாவில்லால் பற்சொத்தை எளிதில் உண்டாகும். இதனால் நீடித்த வாய் துர்நாற்றம் ஏற்படும். 

மேலும் மழைக்காலங்களில் எளிதில் பல் வலி, பற்கூச்சம், ஈறு வீங்குதல் போன்றவை உண்டாகும். அப்படி நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 

இத்தகைய பற்கள் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலும் தடுக்கக்கூடியவை என்பதாலும், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் நன்கு குணமாகவும் செய்கிறது. 

வாய் துர்நாற்றம் நீரிழப்பு, உணவுகள் போன்றவற்றால் மட்டுமே ஏற்படும் என்பது கிடையாது. ஆரோக்கியமற்ற ஈறுகளின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும். ஒருவேளை இதற்கு நீங்கள்  சிகிச்சையளிக்காவிட்டால் ஈறு அழற்சிக்கு வழிவகுத்து பல்சூழ்திசு பிரச்னை உண்டாகும். பல் சூழ்திசு என்பது பற்களின் பிடிமானத்தை கொண்டுள்ள ஈறுகள் அதனை விடுத்து பற்கள் விழ நேரிடும். 

நீரிழிவு நோய் உள்ளவர்கள், வாய் சுகாதாரம் பேணாதவர்கள், புகைப்பிடிப்பவர்கள், புகையிலை பயன்படுத்துபவர்கள் போன்றவர்களுக்கு இந்த ஈறு நோய்த்தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் பற்களில் கிளிப் அல்லது கம்பி அணிந்திருப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். கம்பிகள் காரணமாக பற்கறை மற்றும் உணவுத் துகள்கள் எளிதில் படிந்து பிரச்னை உண்டாகலாம். எனவே வாய் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம்.