ஆயுர்வேத மருத்துவத்தில் பதிமுகம் மரப்பட்டைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த கைராலி ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர் தீபு ஜான், `ஆயுர்வேத மருத்துவத்தின்படி, பதிமுகம் குடிநீரில் அதிகளவிலான சத்துகள் இருப்பதால் அவை உடலுக்கு வலு சேர்க்கும் மருத்துவப் பொருளாகப் பயன்படுகிறது. இது உடலின் உள்ள கெட்டவற்றை வெளியேற்றுவதும், செரிமானத்திற்கு உதவுகிறது. இந்தப் பட்டையில் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதனை நீரில் சேர்த்து குடிக்கும் போது, அது சத்து நிறைந்த மருந்தாக மாறுகிறது’ என்கிறார்.


பதிமுகம் குடிநீரை வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதையும், உடலுக்கு அது என்னென்ன நன்மைகளைத் தருகிறது என்பதையும் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளோம். 



பதிமுகம் குடிநீரைச் செய்வது எப்படி? 


1. ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் குடிநீரை ஊற்றி, அதனைக் கொதிக்க விடவும். 
2. கொதித்த நீரில் சுமார் 1 ஸ்பூன் பதிமுகம் சேர்த்து, அதனை மேலும் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
3. கொதித்த நீரைத் தனியாக எடுத்துவிட்டு, வெதுவெதுப்பாக அதனைக் குடிக்கலாம். மேலும் இதனை சுமார் 24 மணி நேரம் வரை பாதுகாத்தும் பயன்படுத்தலாம். 


இதுகுறித்து கூறும் தீபு ஜான், `இந்தக் குடிநீரில் கிருமிகளுக்கு எதிரான தன்மை இருப்பதோடு, இது சருமத்தைப் பொலிவுடையதாக மாற்றுகிறது. சரும பாதிப்பைச் சரி செய்வது, எலும்பு மூட்டுகளைச் சரிசெய்வது, வயிற்றில் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்துவது முதலானவற்றைப் பதிமுகம் குடிநீர் செய்கிறது. மேலும் இதில் உள்ள பிரேஸிலின் என்ற சத்துப் பொருள், முகப்பருக்களையும் தடுக்கும் தன்மை கொண்டது’ என்கிறார். 



மேலும், பதிமுகம் குடிநீரில் உள்ள சத்துகள் உடலின் ஏற்படும் பல்வேறு தீங்குகளில் இருந்தும் அனைவரையும் காக்கிறது. `பதிமுகம் குடிநீரில் உள்ள சிவப்பு நிறமி இதயத்திற்கு வலு சேர்க்கிறது’ என்று கூறுகிறார் மருத்துவர் தீபு ஜான். 


வலிப்பு எதிர்ப்புத் தன்மை கொண்ட பதிமுகம் குடிநீர் வலிப்புக்கு எதிரான சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் ரத்தத்தைச் சுத்தம் செய்வதுடன், ரத்தத்தில் ஏற்படும் சில நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது பதிமுகம் குடிநீர்.