ஹைலுரோனிக் என்ற வார்த்தையை, சரும பராமரிப்பு என வரும் போது, நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
வயதாக, வயதாக தோல் சுருக்கம் அடைகிறது. இயற்கையாகவே சிலருக்கு வறண்ட சருமம் காணப்படும். சிலருக்கு அவர்கள் செய்யும்  தொழிலின் காரணமாக, சருமத்தில் நீர் ஏற்றம் குறைந்து காணப்படும். இது மட்டுமல்லாமல் நம்முடைய அழுத்தம் நிறைந்த தினசரி வாழ்க்கை முறை, உணவு பழக்கவழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் கோபம் இவற்றின் காரணமாகவும், நமது சருமம் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதை போலவே அதிக வெப்பம் அல்லது அதிக குளிரில் வேலை செய்யும் தொழிலைச் சார்ந்தவர்களுக்கும், சருமமானது நிறையவே பாதிக்கப்படுகிறது.


ஹைலுரோனிக்:


ஹைலுரோனிக் அமிலம் என்ற வார்த்தை மேற்கண்ட சரும பிரச்சனைகளுக்கான பராமரிப்பின் போது தேவைப்படும் ஒரு அமிலம் ஆகும். இது சீரம் வடிவிலும் ஜெல் வடிவிலும் கிடைக்கிறது.  ஹைலுரோனிக் அமிலமானது மனித உடலில் தோலை பாதுகாப்பதற்காக சுரக்கின்ற  அமிலம் ஆகும். இது பிசுபிசுப்பு தன்மை நிறைந்து தோலின் மேற்புறத்தில் படிமனாக படித்திருக்கும். வயது காரணத்தினாலும் தோல் பராமரிப்பு உணவு பழக்கம் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றின் காரணமாகவும் இதன் சுரக்கும் தன்மை குறைந்து நமது சருமமானது பாதிப்பு அடைகிறது. இத்தகைய நேரங்களில் ஹைலுரோனிக் சீரம் அல்லது ஜெல் பயன்படுத்தி இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
 
உடலில் ஹைலுரோனிக் அமிலம்  தோல், கண்கள் மற்றும் இணைப்பு திசுக்களில் காணப்படுகிறது. இது தோலில் உள்ள  தண்ணீரைத் தக்கவைத்து, உடலின் திசுக்களை   தொடர்ந்து ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது. ஹைலுரோனிக் அமிலம்,HA என்று குறிப்பிடப்படுகிறது, இது சல்பேட்டற்ற, அயோனிக் கிளைகோசமினோகிளைகான் எனப்படுகிறது.


சீரம்:


ஹைலுரோனிக் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு அமிலமாகும். வயது போகப் போக ஏற்படும் தோல் சுருக்கம், எதிர்பாராத விபத்தினால் தோல் பாதிப்பு அடைவது மற்றும் பிறப்பிலேயே வறண்ட சருமத்தை கொண்டிருப்பது போன்றவற்றிற்கு, ஹைலுரோனிக் சீரமானது பயன்படுத்தப்படுகிறது. இது நேரடியாக தோலில் பயன்படுத்தப்படுகிறது. தோலின் அடுக்குகளில் இது  பாதிக்கு மேற்பட்ட அளவில் சேமிக்கப்படுகிறது.
லிப் ஃபில்லர்கள்,ஸ்கின் பூஸ்டர்கள் மற்றும் பயோ ரீமோடல்லர்கள் வடிவத்திலும் இவை பயன்படுத்தப்படுகிறது.


இயற்கையான முறை:


இதே நேரத்தில் இயற்கை முறையில் கிடைக்கும் பழம் மற்றும் காய்கறிகளைக் கொண்டும் சருமத்திற்கு தேவைப்படும் மிருதுவான நீரேற்றம் மிக்க தன்மையை கொண்டு வர முடியும்.


அரை கப் பழுத்த பப்பாளியை சிறு துண்டுகளாக நறுக்கி,பிசைந்து கொள்ளவும். அதில் 2 டீஸ்பூன் பால் மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் போல செய்துக் கொள்ளவும். இந்த பேக்கை  முகம் மற்றும் உடலில்  தடவி,சிறிது நேரம் கழித்து,கழுவ வேண்டும்.பாலில் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்க உதவுகிறது.


தேன்:


தேன் நீரேற்றம் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமத்தில் நீர் தன்மையும்,பிசுபிசுப்பு தன்மையும் கொண்டு வருகிறது. இதனால் உங்கள் வறண்ட சரும பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது. அதேசமயம் பால் பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் என நினைத்தால் பாலை தவிர்த்து விடவும்.


இதைப் போல இயற்கையான முறையில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற முடியும் மேலும் உணவு பழக்க வழக்கத்திலும் விட்டமின் சி நிறைந்த பழங்கள் காய்கறிகளை எடுத்துக் கொள்வது சரும பராமரிப்பிற்கும் வறண்டு போகும் தன்மைக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும்


மேலும் உடலில் இருக்கும் கழிவுகள் அந்தந்த பாதைகளில் சரியான முறையில் வெளியேறும் போதும் (தோலில் இருக்கும் வியர்வை துவாரங்களின் வழியாக,அவசியம் வெளியேற வேண்டும்) கணையத்தில் பிரச்சனைகள் அல்லது நோய்த்தொற்று இல்லாத போதும், சருமமானது அதன் தன்மையை இழக்காமல் இருக்கிறது.