சுற்றுச்சூழல் மாசினால் நம் உடலின் சென்சிட்டிவான பகுதிகள் ஆரோக்கியமற்றுப் போகலாம். குறிப்பாக தலைமுடி, சருமம் ஆகியவை பொலிவு இழக்கலாம். அதனால் உங்கள் தலைமுடியை எப்படி பராமறிக்கிறீர்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான கேள்வி. சிலர் எவ்வித பராமரிப்பும் இல்லாமல் மிக நீண்ட, பெரிய மற்றும் பளபளப்பான முடி கிடைக்கிறது என்றாலும்..மற்றொரு பக்கம் இன்னும் பலர் தொடர்ந்து போராடுகிறார்கள்.


அதிகப்படியான பணிச்சுமை, மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, கெமிக்கல் ப்ராடக்ஸ் போன்ற பல காரணிகள் முடி உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சினைகளுக்கு பங்களிக்கின்றன. இருப்பினும், சில சமயங்களில், இந்தப் பிரச்சனைகளுக்குப் பின்னால் உள்ள மூல காரணம் உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களுடன் இணைக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விவாதிக்கும்போது உங்கள் தலைமுடியைக் கழுவும் விதம் அல்லது உங்கள் சருமத்தில் எப்படி எண்ணெய் தேய்ப்பது போன்றவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டும். உங்கள் தலைமுடியைக் கழுவ வெந்நீரைப் பயன்படுத்துகிறீர்களா? அது தவறு என்கிறார் பிரபல தோல் மருத்துவர் ஜெய்ஸ்ரீ ஷரத். மேலும் அவர் வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறார். 


அவர் கூறுகையில் "உங்கள் ஹேர்ஷாஃப்ட் புரோட்டீன் கெரட்டின் மூலம் ஆனது மற்றும் இந்த கெரட்டின் ஹைட்ரஜன் மற்றும் டைசல்பைடு பிணைப்புகளுடன் பின்னிப்பிணைந்துள்ளது. அதனால் ஹேர் ஷாஃப்ட்டில் நீங்கள் எந்த வகையான வெப்பத்தையும் பயன்படுத்தினால் அதாவது சூடான தண்ணீர், ப்ளோ ட்ரையிங், அயர்னிங், ஸ்ட்ரெய்டனிங், ரீபாண்டிங் அல்லது பெர்மிங் செய்தால் அது இந்த டைசல்பைட் பிணைப்புகளை உடைத்துவிடும்” என்று அவர் மேலும் விளக்குகிறார். எனவே, உங்கள் தலைமுடியைக் கழுவ நீங்கள் பயன்படுத்த வேண்டிய சரியான வகையான தண்ணீர் எது?


டாக்டர் ஜெய்ஸ்ரீ கூறுகையில், வெதுவெதுப்பான நீர் அல்லது சாதாரண வெப்பநிலையுடன் கூடிய தண்ணீர் உங்கள் தலைமுடிக்கு சிறந்தது. ஆனால் நீங்கள் கண்டிப்பாக சூடான நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். இதுதவிர... 






சிலருக்கு முடி உதிர்தல், வறட்சியான முடி,முடி நுனி உடைந்து போதல், போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கு காரணம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கும். அதனால் கண்டீஷனரை பயன்படுத்துங்கள். இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. தலை குளித்த பிறகு கண்டீஷனரை போடுங்கள். வெதுவெதுப்பான எண்ணையை சூடு பண்ணி தலைக்கு மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கு உதவும். முடி வேகமாக வளரவும், முடி ஆரோக்கியமாக வளரவும் இது உதவும். முடி உதிர்தல் பிரச்சனை குறையும்.  முடி வேரில் இருந்து ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவும். தேங்காய், ஆலிவ் அல்லது லேவேண்டர் எண்ணெய் , நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்யலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவும்.


இரவில் தலையை சீவுவதால் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. அதனால் முடி வளர்ச்சி அதிகமாகும். சிந்தடிக் பிரிஸ்ட்ல்(synthetic bristles) பிரஷ்களைக்  கொண்டு தலையை சீவினால், முடியில் அதிகம் சிகை உண்டாக்கி டேமேஜை ஏற்படுத்தும். அதனால் சரியான போர் பிரிஸ்ட்ல்( boar bristle brush) சீப்புகளை பயன்படுத்தி, தலை சீவுவது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நீங்கள் தூங்குவதற்கு முன் முடியை சீவுவது, இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். அதனால் முடி வளர்ச்சிக்கு உதவும்.