நமக்கு வயது ஆக ஆக சருமத்தில், சுருக்கம், கோடுகள், தோற்றத்தில் மாற்றம் வரும். இது தவிர்க்க முடியாதது. 30 வயதை கண்டதால் ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சருமத்தில் மாற்றம் வரும். இளமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கும். சருமத்தை இளமையாக வைத்து இருப்பது எல்லாம் ஒரு கலை. ஆரோக்கியமாகவும், சருமத்தை இளமையாகவும் வைத்து கொள்ள சில டிப்ஸ் இதோ.
சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களினாலும், வயது காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும், சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் சீக்கிரம் வரக்கூடும்.
- சிட்ரஸ் பழங்கள் - வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவும். எலுமிச்சை, ஆரஞ்சு, ஆகிய பழங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும்.
- தண்ணீர் - தினம் 2-3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் இருக்கும் கழிவுகள் நீங்கவும், உடல் சீராக இயங்கவும் உதவுகிறது. சரும புத்துணர்ச்சிக்கு , ஆரோக்கியத்திற்கும் தண்ணீர் அவசியம்.
- வைட்டமின் சி மற்றும் ஈ சத்து நிறைந்த காய்கள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்து எடுத்து கொள்ளுங்கள். இது சருமம் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவும். இளமையான தோற்றம் அளிக்க இந்த இரண்டு விட்டமின்களும் அவசியம்.
- நைட் க்ரீம் - நைட் கிரீம்கள் பயன்படுத்த வேண்டும். இது சருமம் வறட்சி ஆகாமல் ஈரப்பதத்துடன் இருக்க உதவும். தினம் இரவு கிரீம் தடவி, காலை எழுந்ததும், தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
- ஆயில் மசாஜ் - சருமம் மற்றும் முகம் மற்றும் முடி ஆகியவற்றிற்கு வாரம் ஒரு நாள் முழுவதும் ஆயில் மசாஜ் செய்வது, சரும புத்துணர்ச்சிக்கும், மனஅழுத்தம் குறையவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலில் இருக்கும் வெப்பம் குறையவும் உதவும்.
- தலை முடி சுத்தம் - தலை முடியை வாரத்திற்கு 2-3 முறை சுத்தமாக தேய்த்து குளிக்க வேண்டும் தலை முடி சுத்தமாக இருப்பதும், சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடியும் ஒருவரின் வயதை கண்டறிய உதவும்
- மனஅழுத்தம் வேண்டாம் - அன்றாட வாழ்வில் மனஅழுத்தம் இன்றி நேர்மறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். மனஅழுத்தம் பல்வேறு ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தும். அதனால் வயதான தோற்றும் சீக்கிரம் வந்து விடும். அதனால் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
- உடற்பயிற்சி - அன்றாடம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்வது, உடல் தசைகளை கட்டுக்கோப்பாக வைக்க உதவும். மேலும், ஹார்மோன்கள் சீராக இயங்கவும், உடல் உறுப்புக்கள் புத்துணர்வுடன் இருக்கவும் இந்த உடற்பயிற்சி அவசியம்.