Diet Red Poha | டயட் ப்ளானை மட்டும் போட்டுட்டு, அப்புறம் சொதப்புறீங்களா? அப்போ இத படிங்க..

காலை உணவு ஒரு நாளில் மிக முக்கியமான உணவாகும். அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இது அன்றைய நாளை புத்துணர்வுடன் வைத்து கொள்ள உதவும்.

Continues below advertisement

காலை உணவு ஒரு நாளில் மிக முக்கியமான உணவாகும். அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவை எடுத்து கொள்ள வேண்டும். இது அன்றைய நாளை புத்துணர்வுடன் வைத்து கொள்ள உதவும். ஆரோக்கியமான காலை உணவு வரிசையில், சிவப்பு அவல் உப்புமா ரெசிபி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

Continues below advertisement


சிவப்பு அவள் உப்புமா ரெசிபி செய்வதற்கு தேவையான பொருள்கள்

சிவப்பு அவல் - 1 கப்

பெரிய வெங்காயம்  - 1 ( பொடியாக நறுக்கியது )

பச்சை மிளகாய் - 3 ( பொடியாக நறுக்கியது )

தக்காளி  - 1 ( பொடியாக நறுக்கியது )

கறிவேப்பிலை - சிறிதளவு

பீன்ஸ் - 5 (  பொடியாக நறுக்கி கொள்ளவும் )

கேரட் - 1 (சிறிதாக நறுக்கி கொள்ளவும் )

பட்டாணி - ஒரு கையளவு

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

கடுகு, உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 3 ஸ்பூன்


செய்முறை -

  • அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
  • அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதக்கியதும் அதனுடன் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதனுடன் கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • காய்கள் முக்கால் பாகம் வெந்தவுடன் அதனுடன் அவல் சேர்த்து வேக வைக்கவும்.
  • அவல் நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • சூடான சுவையான காய்கள் சேர்த்து சிவப்பு அவல் உப்புமா தயார்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் ஏற்ற உணவு

காய்கள் சேர்த்து நார்ச்சத்துடன் இருப்பதால் குறைவாக எடுத்து கொண்டாலே வயிறு நிறைவாக இருக்கும். நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஏற்ற காலை உணவு. நீரிழிவு நோயாளிகளும் இதை ஒரு வேலை உணவாக எடுத்து கொள்ளலாம். குறைவான நேரத்தில் ஆரோக்கியமாக சமைத்து சாப்பிடலாம்.

 

காலை உணவு சமைக்க நேரமில்லை, சாப்பிட நேரமில்லை என்று சொல்லாமல், வெறும் 10 நிமிடத்தில் சிவப்பு அவல் உப்புமா செய்து சாப்பிடலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola