அம்மா - மகன் போல உறவுமுறைகளில் மிகவும் புனிதமான உறவாக கருதப்படுவது அண்ணன் - தங்கை. ஒரு பெண் தனக்கு மிகவும் பாதுகாப்பான ஆண்களாக முதன்முதலில் கருதுவது அவர்களது தந்தை மற்றும் சகோதரர்களை மட்டுமே ஆகும். குறிப்பாக, அண்ணன் எனப்படும் மூத்த சகோதரர்கள் ஆகும். ஒரு ஆணும் தனது தாய்க்கு நிகரான அன்பை தனது தங்கை மீது வைத்திருப்பார். 

அந்த அண்ணன் - தங்கை பாசத்தை போற்றும் விதமாகவே ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நாட்களில் பெண்கள் தங்களது சகோதரர்கள் கையில் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்துவார்கள். 

இந்தியாவில் இன்று ரக்ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ரக்ஷா பந்தனை முன்னிட்டு பெண்கள் தங்கள் அண்ணன்களுக்கும், அண்ணன் போன்று கருதும் ஆண்களுக்கும் இந்த நாளில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

ரக்ஷா பந்தனை முன்னிட்டு கீழே உள்ள புகைப்படங்களை உங்கள் அன்பு சகோதரருக்கு பகிர்ந்து வாழ்த்து தெரிவியுங்கள்.

 

தந்தைக்கு பிறகு மற்றொரு தந்தையாக உறுதுணையாக இருக்கும் உற்ற துணை அண்ணன்.

ஆண்டுகள் கடந்தும் நம் மேல் நாம் கொண்ட சகோதரத்துவம் தழைத்தோங்கட்டும்.

அண்ணனைப் போல ஒரு ஆசானும் அல்ல.. அண்ணனைப் போல ஒரு காப்பானும் அல்ல.. 

 

பார் போற்றும் பாசமிகு அண்ணன் - தங்கை நாம்தான்..

 

அண்ணன் ஒருவன் துணை இருக்க.. ஆயிரம் தடைகள் வந்தாலும் கவலை எதற்கு?

ஒரு ஆணிற்கு தாயின் உருவில் வாழும் மற்றொரு தாய் தங்கை.

மேலே உள்ள புகைப்படங்களை உங்கள் பாசத்திற்குரிய அண்ணன்களுக்கும், அண்ணனாக உங்கள் உறுதுணையாக இருப்பவர்களுக்கும் பகிருங்கள்.