தேவையற்ற ரோமங்களை நீக்கி கூடுதல் பொலிவு கிடைக்கும் என்பதாலேயே பெண்களுக்கு பொதுவாக கை, கால்களில், அண்டர் ஆர்ம்ஸில் இருக்கும் தேவையற்ற ரோமங்களை நீக்குவது பிடிக்கும். சந்தையில் அதற்கு ரெடிமேடாக நிறைய க்ரீம்கள் கிடைக்கின்றன. 


இருந்தாலும் ரோமங்களை அகற்ற மூன்று வழிகள் இருக்கின்றன. அவை:


1. திரெட்டிங் மூலம் ரிமூவ் செய்தல்


2. வேக்ஸிங் கிரீம் மூலம் ரிமூவ் செய்தல் 


3. ரேசர் மூலம் ரிமூவ் செய்தல்


இதில் பெரும்பாலானோர் கிரீம் மூலம் ரிமூவ் செய்வதையே விரும்புகிறார்கள். ஏனெனில் வலியில்லாதது என்பதால் இதனை விரும்புகின்றனர். ஆனால், சந்தையில் விற்கும் சில க்ரீம்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனாலேயே க்ரீம் பயன்படுத்துவதில் தயக்கம் கொண்டுள்ளனர்.


சிலர் கோல்டு வேக்ஸ் பயன்படுத்துகின்றனர். சாதாரணமாக, ஜெல் மூலமாக வேக்ஸ் செய்யும்போது அதனைச் சூடுபடுத்தி கை, கால்களில் அப்ளை செய்ய வேண்டும். ஆனால், இந்த வகை கோல்டு வேக்ஸைப் பயன்படுத்தும்போது சூடுபடுத்த தேவையில்லை. நேரடியாகவே கை, கால்களில் அப்ளை செய்துகொள்ளலாம். வெளியூர் செல்லும் நேரங்களில் கையோடு ஹீட்டரைக் கொண்டுசெல்ல முடியாது. அந்த நேரத்தில், இந்த வகை வேக்ஸ் உதவியாக இருக்கும். கோல்டு வேக்ஸ் செமி சாலிடாக இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.


ஆனாலும் க்ரீம் பேஸ்ட் ஹேர் ரிமோவல் க்ரீமுக்கு தான் மவுசு அதிகம்.


அப்படியொரு டிப்ஸ் பார்ப்போம்:


20 முதல் 30 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பு பத்த வைத்து ஒரு பேன் வைத்து அதில் இந்த கிராம்பை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றுங்கள். இதை நன்றாக கொதிக்க விடுங்கள். நன்றாக கொதித்ததும் அதன் நிறம் மாறிவிடும். நிறம் மாறியபின்னர் அதனை இறக்கிவிடுங்கள். அது நன்றாக ஆறட்டும். பின்னர் அதில் இருந்து ரெண்டு ஸ்பூன் கிராம்பு தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் டம்ப்ளரில் உள்ள மொத்த கிராம்பு தண்ணீரிலும் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அதை நன்றாக கலந்துவிடுங்கள். பின்னர் அதில் ஒயிட் வினிகர் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த கலவையை எடுத்து கை, கால்களில் ரோமம் உள்ள பகுதியில் முழுவதுமாக பூசி விடுங்கள். நன்றாக மசாஜ் செய்யுங்கள். மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யுங்கள். பின்னர் கைகளை கால்களை நல்ல குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். 




பின்னர் ஒரு பவுலில் கொஞ்சம் அரிசி மாவு, ஒன்றரை டீஸ்பூன் எலுமிச்சை நீர், மீதமுள்ள கிராம்பு தண்ணீர் சேர்க்கவும். அதனை பேஸ்ட் பதத்தில் உருவாக்கிக் கொள்ளவும். பின்னர் அதை கை, கால்களில் தேய்த்து பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். அதன் பின்னர் டிஸ்யூ பேப்பர் வைத்து கை, கால்களை துடைத்துக் கொள்ளவும். துடைக்கும் போதேல் தேவையற்ற ரோமங்களும் சேர்ந்து வந்துவிடும். பின்னர் குளிர்ந்த நீரால் கை, கால்களை கழுவவும்.