எந்த பருவ நிலையாக இருந்தாலும், முடியை பராமரிப்பதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முடி வளர்ச்சி, முடியும் தோற்றம் இரண்டும் முக்கியம். சிலருக்கு முடி தான் தன்னம்பிக்கை தருவதாக இருக்கும். முடி வளர்வதற்கு எந்த அளவு மெனக்கெடுகிறோமோ அதே போல் முடியை பராமரிக்கவும் மெனக்கெட வேண்டும். வெயில் காலத்தில் முடியை பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோமா, எவ்வளவு நேரம் ஒதுக்குகிறோமோ, அதே போல் மழை காலத்திலும் முடியை பராமரிக்க வேண்டும்.


மழை காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். முன் இருந்ததை விட 30 % கூடுதலாக எண்ணெய் பசை இருக்கும். அதனால் சரியான ஷாம்பு பயன்படுத்தி சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.




வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் வைத்து 15-30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு, ஷாம்பு கொண்டு முதலில் மண்டைப்பகுதியையும், முடியையும் அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், வேப்ப எண்ணெய், டீ ட்ரி எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம். எண்ணையை கொஞ்சம் சூடு செய்து மிதமான இதத்தில் தடவலாம். மழையில் நனைத்த பிறகு தலை குளிப்பதாக இருந்தால், முதலில் தலையில் தண்ணீர் கொண்டு சுத்தமாக அலசி கொள்ள வேண்டும் பின் SLS இல்லாத ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.




உங்களது முடிக்கு ஏற்ற கண்டிஷனர்  தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். இது முடி புத்துணர்வுடன் இருப்பதற்கு உதவும். கண்டிஷனர்  தடவி 15- 20 நிமிடங்கள் கழித்து முடியை சுத்தமாக கழுவலாம். இது முடி சிக்குகளை குறைத்து, முடி ஈரப்பதத்துடன், புத்துணர்வாக இருப்பதற்கு  உதவும்.


ஹேர் ட்ரையர் பயன்படுத்த வேண்டாம் - முடியை காயவைக்க மைக்ரோ ஃபைபர் துண்டுகளை பயன்படுத்தி தலையை துவட்டி காய வையுங்கள் ஆனால் ஹேர் ட்ரையர் பயன்படுத்த வேண்டாம். வெப்பமான கருவிகளை பயன்படுத்தும் போது , முடி உதிர வாய்ப்பு இருக்கிறது.




மழைக்காலத்தில் முடியை விரித்து போடுவதை தவிர்த்திடுங்கள். முடியை பின்னி போடலாம் அல்லது போனி டையில் போட்டு கவர் செய்து கொள்ளலாம்.


வேம்பு மற்றம் மஞ்சள் பேஸ்ட் - மழைக்காலத்தில் வேம்பு மற்றம் மஞ்சள் இரண்டையும் கலந்து முடியில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முடியை கழுவலாம். இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி மைக்ரோபியல், பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி செப்டிக், போன்ற பண்புகளை கொண்டுள்ளது. அதனால் மழை காலத்தில் வரும் பொடுகு பிரச்சனையில் இருந்து சிறந்த தீர்வாக இருக்கும்.




செம்பருத்தி இலைகள், புதினா இலைகள் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து முடியில் பேக் போட்டு 30 நிமிடங்கள் கழித்து முடியை கழுவுங்கள். இது பொடுகு அரிப்பு, போன்ற பிரச்சனைகளில் இருந்து சிறந்த தீர்வை தரும். கூந்தல் ஆரோக்கியத்தில் வெளிப்புறமாக சுத்தமாக வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நாம் எடுத்து கொள்ளும் உணவும் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் உணவு கட்டுப்படும் அவசியம்.