இளைஞர்களின் விருப்பமான டாட்டூ கலாச்சாரம் அழகா இல்லை ஆபத்தா என்பதை இந்தக் கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். டாட்டூ அணிவது ஸ்டைல் என்பதால் இளைஞர்கள் அதை விருப்பத்துடன் உடலில் இட்டுக் கொள்கின்றனர். ஆனால் டாட்டூ மையை உரிஞ்சும் ஊசி வழியாக பல்வேறு தொற்றுகளை, அலர்ஜிகளை நாம் உடலில் வாங்கிக் கொள்ள நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


டாட்டூவை சுற்றி ஏற்படும் தடிப்பு தான் அதனால் நமக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் விஷயம். மை பழையதாக இருந்தாலும் அல்லது பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சுத்தமாக இருக்காவிட்டால் இதுபோன்று ஏற்படும்.
 
டாட்டூ தொற்று ஏற்படுவது ஏன்?


டாட்டூ தொற்று ஏன் ஏற்படுகிறது என்று க்ளீவ்லேண்ட் கிளினிக் தெரிவித்துள்ளது. அதன்படி மை தான் பெரிய தொற்றுக்குக் காரணமாக அமைகிறது. பழைய மையில் டாட்டூ போட்டால் பாக்டீரியா தொற்று ஏற்படும்.
 
மக்கள் ஏன் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்?
 
மக்கள் ஏன் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர் என்ற கருத்துக் கணிப்பில் ஸ்டைல் தான் முதல் இடத்தில் உள்ளது. அதன் பின்னர் அழகுக்காக அல்லது நினைவுக்காக அன்புக்காக என்ற பல கருத்துகளைக் கூறுகின்றனர்.


சுத்திகரிக்கப்படாத நீர்
 
டாட்டூ கலைஞர்கள் தண்ணீருடன் மையை சேர்க்கின்றனர். இதனால் தண்ணீரில் உள்ள நுண்ணியிர்கள் சில தொற்றை ஏற்படுத்தும்.  Nontuberculous Mycobacteria (NTM), Pseudomonas aeruginosa,  Staphylococcus aureus போன்ற பாக்டீரியாக்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
 
ஸ்டெர்லைஸ் செய்யாத ஊசி


டாட்டூ போடும்போது ஸ்டெர்லைஸ் செய்யப்படாத ஊசிகள் பயன்படுத்தப்படுகிறது. டாட்டூ போடுவதற்கு முன்னால் முறையாக புதிய சிரிஞ்ச் பயன்படுத்தப்படுகிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். டாட்டூ போடுவதற்கு முன்னதாக அதன் பக்க விளைவுகளைப் பற்றி நன்றாக நாம் விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


மிகவும் ஃபேஷனாக பரவி வரும் இந்த டாட்டூ மோகத்தினால் உடல் நலம் பாதிக்கப்படுவது, பல சரும கோளாறுகள் ஏற்படுவது மற்றும் உங்களது இரத்தத்தின் திறன் குறைவது என பல உடல்நல பிரச்சனைகள் வருகிறது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் டாட்டூ குத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள். நீங்கள் குத்திக் கொள்ளாவிட்டாலும், உங்களது நண்பர்களில் யாராவது இதில் விருப்பம் உடையவர்களாக இருந்தால், அவர்களிடம் இதைப் பற்றி நீங்கள் பகிர்ந்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும்.


டாட்டூ குத்தும் போது ஒருமுறை பயன்படுத்திய ஊசியை மறுமுறை உபயோகிக்கும் போது நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதன் மூலமாக ஒரு சிலருக்கு எச்.ஐ.வி நோய்த்தொற்று கூட பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.