உடலறுவு பற்றி பெண்கள் பேசுவதே தவறு என நினைக்கும் சமூகமாகத் தான் இன்னமும் நமது இந்திய சமூகம் இருக்கிறது. அதில் பெண்களுக்கு வேண்டுமென்றே சில தவறான புரிதலையும் இச்சமூகம் புகட்டி வைத்துள்ளது.


அதை உடைக்கும் வகையில் டிப்ஸ் கூறியுள்ளார் இம்ப்யூ நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஸ்தா சர்மா.  அவற்றைப் பற்றி விளக்கமாக அறிவோம்.


1. பெண்கள் சுய இன்பம் காண்பதில்லை
அதில் முதலாவதாக இடம்பெற்றிருக்கிறது பெண்கள் சுய இன்பம் காண்பதில்லை என்ற தகவல். ஆனால் பல்வேறு ஆய்வுகளும் 18 வயதைக் கடந்த பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுகின்றனர் எனக் கூறுகிறது. அந்த வயதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் பாலியல் விறுப்பு வெறுப்புகள் என்னவென்று அறியத் தொடங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியச் சமூகத்தில் பெண்கள் சுய இன்பம் காண்பது தவறு, வெட்கக்கேடானது, அவமானகரமானது என்றெல்லாம் கருத்துகள் கட்டமைக்கப்பட்டுள்ளது.


2. குழந்தை பெற்றுக்கொள்வதால் யோனி உருவம் மாறும்
குழந்தை பெற்றுக் கொள்வதால் பெண்ணுறுப்பான யோனியின் உருவம் மாறிவிடும் என்றொரு பொதுவான கருத்து உள்ளது. ஆனால் உண்மையில், குழந்தை பிறந்த வெகு சில வாரங்களிலேயே பெண்ணுறுப்பு அதன் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதுதான் மருத்துவ ரீதியிலான உண்மை.


3. உடலுறவில் பெண்களுக்கு உச்சம் கிடைக்கிறது..
உடலுறவின் போது பெண்களுக்கு எப்போதும் உச்ச உணர்வான ஆர்கஸம் கிடைத்துவிடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் உடலுறவின்போது 75% பெண்களுக்கு ஆர்கஸம் எட்டப்படுவதில்லை. அவர்களுக்கு க்ளிடோரியல் ஸ்டிமுலேஷனால் மட்டுமே உச்சம் கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது.




4. ஆர்கஸம் வந்ததாக நடிக்கலாம்.. தவறில்லை
உடலுறவின் போது பெண் ஆர்கஸம் வந்தது போல் போலி பாவனையை ஏற்படுத்தலாம். அதனால் அவரின் பார்ட்னருக்கு இன்பம் கிட்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு என்றாலே அதில் க்ளைமாக்ஸ் தான் முக்கியம் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த  உணர்வை பார்ட்னருக்குக் கொடுக்க ஆர்கஸம் ஏற்படாவிட்டாலும் போலியாக அது கிட்டியதுபோல் காட்டுவதில் தவறில்லை எனக் கூறப்படுகிறது.


5. அதிக உறவு ஆபத்தா?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் போது, அதிகமாக உறவு கொண்டால் பெண்ணுறுப்பு பாதிக்கப்படும் என்ற தகவல் உள்ளது. ஆனால், பெண்ணுறுப்பு எலாஸ்டிக் தன்மை கொண்டது. அதனால் செக்ஸ்வூலாக ஆக்டிவாக இருப்பதில் பெண்கள் அவமானப்படத் தேவையில்லை. அச்சப்படவும் தேவையில்லை.





6. எல்லாமே ஊடுருவல்தான்..
உடலுறவு என்றாலே அது ஆணுறுப்பால் பெண்ணுறுப்பில் ஊடுருவுவதன் மூலம் இருவருக்கும் இன்பம் கிட்டிவிடும் என்று கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 6% பேருக்கே இவ்வாறாக பெனைல் வஜைனல் உறவில் உச்சம் கிட்டுகிறதாம். எனவே, உடலுறவில் எக்ஸ்ப்ளோர் செய்ய நிறைய இருக்கிறது எனக் கூறுகின்றன ஆய்வுகள்.


7. பார்ன் வீடியோக்களில் உள்ளதால் தான் உடலுறவா?
பாலியல் உறவு வீடியோக்களில் இருப்பதுதான் உண்மையில் உடலுறவுக்கான முறையா என்றால் இல்லை. ஏனெனில் போர்ன் சந்தை ஆண்களுக்கானது. அவர்கள் எப்படி ஒரு பெண்ணை நுகர வேண்டும் என நினைக்கின்றனரோ அப்படித்தான் அந்த வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன. அதனால், அத்தகைய வீடியோக்களில் இருப்பதை மட்டும் உறவு என நினைக்க வேண்டாம் எனக் கூறுகிறார் இம்ப்யூ நேச்சுரல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆஸ்தா சர்மா