கருப்பு கவுனி அரிசியானது,  சீனாவில் அரசர்கள், மன்னர்கள், பெருவணிகர்கள் , அரச குடும்பத்தினர்கள் என பெரிய பணக்காரர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இது  கப்பல் வழியாக  இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இது செட்டிநாடு உணவுகளில் மிகவும் பிரபலமானது.




இது ஊட்டச்சத்து மிக்கதாகவும், சுவை நிறைந்ததாகவும்  இருக்கிறது. இதில்  நார்சத்து பிரதான மூலமாக இருக்கிறது. இதில், லைசின் (Lysine), டிரிப்டோபான் (Tryptophan) போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ,  வைட்டமின் பி1 , வைட்டமின் பி2 , போலிக் அமிலம், ஆகியவை நிறைந்து இருக்கிறது. மேலும் இதில், இரும்பு, துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் நிறைந்து இருக்கிறது. இது மற்ற அரிசியை  விட அதிக அளவில் புரத சத்து நிறைந்து இருக்கிறது. இதை அனைத்து வயதினரும் எடுத்துக்கொள்ளலாம்.




கவுனி அரிசியின் பயன்கள்



  • இது அதிக நார்சத்து மற்றும் குறைந்த கார்போஹைடிரேட் கொண்டு இருப்பதால் இது உடல் எடைக்கு உதவும். இது நார்சத்து அதிகம் இருப்பதால், குறைவாக சாப்பிட்டாலே வயிறு நிறைவாக இருப்பது போன்று தோன்றும்.

  • இதில் கால்சியம் சத்து இருப்பதால், இது எலும்புகளை வலுப்பெற உதவுகிறது.

  • இதில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

  • புற்று நோய் வராமல் தடுக்கும்.

  • இது உடலில் கெட்ட கொழுப்புகளை குறைகிறது. தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுகிறது.

  • நாட்பட்ட நோய்களான , சர்க்கரை நோய் , உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது. ஏற்கனவே நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அரிசியை உணவில் சேர்த்துக்கொள்வதால், நோயின் தீவிர தன்மை அதிகமாகாமல் பாதுகாக்கலாம்.


இதை இட்லி, பொங்கல், கூழ், கஞ்சி , என ஏதுவாக வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். குறைந்தது வாரத்திற்கு 2 அல்லது 3 முறை உணவில் சேர்த்துக்கொள்வது   நல்லது.


கவுனி அரிசி பொங்கல் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ளலாம் :


தேவையான பொருள்கள்


கவுனி அரிசி - 1/2 கப்


பாசிப்பருப்பு - 1/4  கப்


வெல்லம் - 1/2 கப்


நெய் - 2 டீஸ்பூன்


உப்பு - தேவையான சேர்த்து கொள்ளலாம்


உலர் பழங்கள் - தேவையான அளவு


செய்முறை



  • கவுனி அரிசி சமைப்பதற்கு முன் 2 மணிநேரங்கள் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

  • பின்னர் கவுனி அரிசி, பாசி பருப்பு, இரண்டையும் பால் சேர்த்து வேக வைக்கவும்.

  • இன்னொரு பாத்திரத்தில் தனியாக வெல்லப்பாகு தயாரித்து கொள்ளவும்.

  • அரிசி நல்ல வெந்த பிறகு, அதனுடன் இந்த வெல்ல பாகு சேர்த்து நன்றாக கிளறி அதனுடன் நெய்யில் வறுத்த உலர்பழங்களை சேர்த்து வைக்கவும்.