ஐரோப்பிய நாடுகளில் ஆண்டாண்டு காலமாக புழக்கத்தில் இருக்கும் உணவு தான் கெஃபிர். இந்த கெஃபிர் உணவு வேறொன்றும் இல்லைங்க.. ப்ரோபயாடிக் பானம். அட நாம் வாங்கிப் பருகும் யோக்ஹர்ட் தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இது யோக்ஹர்ட்டுக்கும், பாலுக்கும் இடையேயான ஒரு பதத்தைக் கொண்ட உணவு. இதில் வைட்டமின்களும் மினரல்களும் நிறைந்திருக்கின்றன.
ஐரோப்பாவில் பிரபலமான இந்த கெஃபிர் இப்போது அமெரிக்காவில் இன்னும் பிரபலமாகி வருகிறது.
கெஃபிர் ஊட்டச்சத்து விவரம்:
110 கலோரிக்கள்
2 g டோட்டல் ஃபேட்
10 mg கொழுப்பு
125 mg சோடியம்
12 g கார்போஹைட்ரேட்ஸ்
0 g நார்ச்சத்து
12 g சர்க்கரை
0 g ஆடட் சுகர்
11 g புரதம்
90 mcg வைட்டமின் A (10% DV)
5 mcg வைட்டமின் D (25% DV)
390 mg கால்சியம் (30% DV)
376 mg பொட்டாசியம் (8% DV)
இவை தான் கெஃபிரில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு.
கெஃபிர் என்றால் என்ன?
கெஃபிர் என்பது நொதிக்கவைக்கப்பட்ட பால் சார்ந்த உணவுப் பொருள். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த உணவு எனக் கூறுகிறார் லைஃப்வே உணவு நிறுவனர் ஜூலி ஸ்மோலியான்ஸ்கி. இவரின் குடும்பம் முன்னாள் சோவியத் குடியரசில் இருந்தது. இவர்கள் பல ஆண்டுகளாகவே கெஃபிர் தயாரிப்பு தொழில்தான் உள்ளனர். வரலாற்றுப்படி மார்கோ போலோ தனது நூலில் கிளியோபாட்ரா கெஃபிரில் குளித்ததாகக் கூறியிருப்பார்.
கெஃபிரில் ஒருவித புளிப்புச் சுவை இருக்கும். ஸ்மூத்தி போன்ற உணவுகளில் இதை சேர்த்துக் கொள்ளலாம். இது நொதிக்கவைப்பட்ட பானம் என்பதால் இதில் ப்ரோபயாட்டிக்குகள் அதிகமாக உள்ளது. ஆடு, மாடு, செம்மறி ஆடு எனப் பல கால்நடைகளின் பாலிலும் கெஃபிர் செய்கின்றனர்.
கெஃபிர் நன்மைகள் என்னென்ன?
கெஃபிரில் வைட்டமின் டி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் ஏ, பி12, பொட்டாசியம், செலேனியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. நொதிக்க வைப்பதால் கெஃபிரில் வைட்டமின்கள் B1, B12, K, மற்றும் ஃபோலிக் அமிலம், கால்சியம், அமினோ அமிலங்கள் ஆகியன அதிகரிக்கின்றன.
குடல் வளத்தை பெருக்கும்..
இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. நன்மை தரும் பக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பக்டீரியாவுக்கு உண்டு.
எதிர்ப்புசக்தியை உருவாக்கும்..
கெஃபிர் வகை உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாகக் கட்டமைக்கும். வைரல் நோய்களையும் தடுக்கும். ஆன்ட்டிபயாடிக்குகள் சாப்பிட்டு முடித்தவர்கள் கெஃபிர் சாப்பிடுவது குடல்நலத்துக்கு நல்லது.
எலும்புக்கு ஆரோக்கியம் தரும்..
கெஃபிரில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் அது எலும்புக்கு நன்மை பயக்கும். குறிப்பிட்ட சில கெஃபிர் பிராண்டுகளில் வைட்டமின் டி யும் சேர்க்கப்பட்டிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் கெஃபிர், 90% செரட்டோனின் கொண்ட உணவு. இதனால் மனச்சோர்வு நீங்கும். மூளையில் செரட்டோனின் அளவைக் கூட்டும்.
அதுமட்டுமல்லாது புற்றுநோய் எதிர்ப்புத் தன்மைகளும் கொண்டது. குறிப்பாக மார்பகப் புற்றுநோய், கோலோரெக்டல் புற்றுநோய் ஆகியனவற்றுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டது.