பாஸ்தா பிடிக்கும்; ஆனால், இந்திய சமையல் முறைப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சம்மர் வெஜ் பாஸ்தா செய்து சாப்பிடலாம்.
சம்மர் வெஜ் பாஸ்தா
என்னென்ன தேவை?
பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) - 250 கிராம்
பச்சை பட்டாணி - 1 1/2 கப்
சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று
துருவிய கேரட் - அரை கப்
வேகவைத்த ஸ்வீட்கார்ன் - அரை கப்
க்ரீம் - அரை கப்
பூண்டு - 2 பல்
செர்ரி தக்காளி - அரை கப்
துருவிய சீஸ் - ஒரு கப்
பால் - ஒரு கப்
உப்பு -தேவையான அளவு
ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)
செய்முறை:
பாஸ்தாவில் சேர்க்க வேண்டிய மூன்று வண்ண குடைமிளகாய், ஸ்வீட்கார்ன், கேரட், செர்ரி தக்காளி, பச்சை பட்டாணி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின், அதில் பாஸ்தா, கலந்து 1 நிமிடம் வதக்கவும். இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.
10 -15 நிமிடங்களுக்குள் வெந்துவிட்டும். பாஸ்தா, காய்கறிகள் வெந்ததும், அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.
பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:
பாஸ்தாவை வேக வைக்க வைக்கும்போது கவனிக்க வேண்டிய விசயம். 0தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட வேண்டும். அதோடு சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பாஸ்தா குழையாமல், ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க உதவும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்க வேண்டாம். 7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். அதன் மீது அறைவெப்பநிலையில் உள்ள தண்ணீரை ஊற்றலாம். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.
பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம். சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்தில் செய்யவது எப்படி என்று காணலாம்.
இட்லி பாஸ்தா
இடலி - தேவையான அளவு 1 கப் வெங்காயம் (பொடியாக நறுக்கியது), 1 கப் குடைமிளகாய், 1 கப் தக்காளி, எண்ணெய் அல்லது வெண்ணெய் ஒரு ஸ்பூன், பெருங்காய தூள் ஒரு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், சிவப்பு மிளகாய்ப் பொடி ஒரு ஸ்பூன் (காரத்திற்கு எற்றவாறு சேர்த்துகொள்ளலாம்.), சோயா சாஸ் ஒரு ஸ்பூன். உப்பு தேவையான அளவு சேர்க்கலாம்.
செய்முறை:
இட்லி பாஸ்தா எளிதாக செய்து விடலாம். இட்லியை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில், சீரகம் சேர்க்கவும். அது பொரிந்ததும் வெங்காய்ம், காய்கறி சேர்க்கவும். நன்றாக வதக்க வேண்டும். இதோடு, மிளகாய் தூள், உப்பு, சேர்க்கவும். பின்னர், பாஸ்தா சாஸ், சோய் சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் இட்லியை சேர்க்கவும். இட்லி மசாலாவில் நன்றாக கலந்திருக்க வேண்டும். அவ்ளோதான் இட்லி பாஸ்தா தயார்.