சோயா மீல் மேக்கர் சிலருக்கு ஃபேவரைட். பிரியாணி, தக்காளி சாதம் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட பிடிக்கும். அப்படியெனில், சோயா சங்கஸ் வைத்து மசாலா, சுவையான 65 உள்ளிட்டவற்றை செய்து சாப்பிடலாம். சோயா சங்க்ஸ் வைத்து செய்யும் ஒரு க்ரேவியின் செய்முறையை இங்கு காணலாம்.
சோயா டிக்கா மசாலா
என்னென்ன தேவை?
சோயா சங்க்ஸ் - 100 கிராம்
தயிர் - ஒரு கப்
வெங்காயம் - 4
தக்காளி - 2
குடை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் 1/4 டீ ஸ்பூன்
தந்தூரி மசாலா - 1 டீ ஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீ ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீ ஸ்பூன்
சீரகம் - ஒரு டீ ஸ்பூன்
பாப்ரிக்கா - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
பட்டை - சிறிதளவு
செய்முறை
இந்த மசாலா செய்வதற்கு முதலில் சோயா சங்க்ஸ் சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்து அதை வேக வைக்க வேண்டும். அது வேகும் நேரத்தில் வெங்கயாம், பச்சை நிற குடைமிளகாய் ஆகியவற்றை சதுர வடிவில் நறுக்கி கொள்ள வேண்டும். வெந்த சோயா சங்க்ஸை வடிக்கடி எடுக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், வேக வைத்த சோயா சங்க்ஸ் ஆகியவற்றை சேர்க்கவும். இதோடு, தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், தந்தூரி மசாலா, உப்பு, கடலை மாவு, இஞ்சிப் பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு, இந்த கலவையை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் சேர்க்க வேண்டும். 8 -10 நிமிடங்கள் சோய சங்க்ஸ் நிறம் மாறி, மிளகாய் தூள் வாசனை நீங்கியதும் தனியே எடுத்து வைக்கவும். இப்போது, டிக்கா மசாலா தயாரிக்கும் நேரம். கடையில் எண்ணெய் ஊற்றி, பிரியாணி இலை, சீரகம் சேர்த்து அது பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
இப்பொது, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து அது சிறிது வதங்கியதும் மிளகாய், தூள், மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இது 10 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். இந்நிலையில், ஒரு கப் தண்ணீரை சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால் சோயா டிக்கா மசாலா தயார். சப்பாத்தி, தோசை ஆகியவ உணவுகள் சாப்பிட சுவையாக இருக்கும்.