தேவையான பொருட்கள் 


ரவை – 1 கப்


மைதா – 3 டேபிள் ஸ்பூன்


உப்பு – தேவையான அளவு


புளி தண்ணீர் – 1 கப்


வெல்லம் – ¼ கப்


பேரீச்சை பழம் – 6


கொத்தமல்லி – ½ கப்


புதினா – ½ கப்


பச்சை மிளகாய் - 3


இஞ்சி – 1 துண்டு


எலுமிச்சை – 1


மிளகு – ¼ டீஸ்பூன்


சீரக தூள் – 1 டீஸ்பூன்


வேக வைத்த உருளைக்கிழங்கு – 2


வேக வைத்த கொண்டைக்கடலை – ½ கப்


மிளகாய் தூள் – தேவையான அளவு


நறுக்கிய வெங்காயம் - 1


செய்முறை


முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா மாவு, ½ டீஸ்பூன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்கு பிசைய வேண்டும்.


மாவை மிருதுவாக பிசைந்ததும், அதை ஈர துணியால் மூடி 30 நிமிடம் அப்படியே விடவும். மாவு நன்கு ஊறி நன்கு உப்பி வரும்.


இப்போது, அடுப்பில் கடாயை வைத்து அதில் புளி தண்ணீர், வெல்லம், பேரீச்சை பழம், அரை டீஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். நன்கு கொதித்து ஆறியதும், அதை மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது புளி சட்னி தயார்.


அடுத்து, புதினா இலையுடன், கொத்தமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி, எலுமிச்சை சாறு, மிளகு, சீரக தூள், சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்


அதை வடிக்கட்டி, 1 கப் தண்ணீர் சேர்க்கவும். இப்போது கிரீன் சட்னி தயார்.


வேக வைத்த உருளைக்கிழங்குடன் கொண்டைக்கடலை, வெங்காயம், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், சீரக தூள் அல்லது சாட் மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். இப்போது பூரிக்கு நடுவில் வைக்கும் மசாலாவும் தயார்.


கடைசியாக ஊற வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக பூரிக்கு எடுத்து, அதை சிறிய வட்ட அளவில் தேய்த்து,  அதை காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும்.பூரி நன்கு பொன்னிறமாக வரும் வரை காத்திருந்து பக்குவமாய் பொரித்து எடுக்கவும்.இப்போது பானி பூரிக்கு தேவையான அனைத்தும் தயார். இப்போது பானிப்பூரியை சுவைக்கலாம்.


மேலும் படிக்க


Entertainment Headlines Aug 12: ஜெயிலர் வசூல் தாண்டவம்.. அசோக் செல்வனுக்கு டும் டும்.. சோகத்தில் ரஹ்மான் ரசிகர்கள்... டாப் சினிமா செய்திகள்!


Asian Champions Trophy: தோல்வியே இல்லாத கீரிடம்.. வெற்றி நடையில் இந்திய அணி.. இறுதிப் போட்டிவரை கடந்து வந்த பாதை..!