இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிகவும் பிரபலமானது நவராத்திரி வழிபாடாகும். உலகம் முழுதும் வாழும் இந்து மக்களால் இந்த நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரியை ஒட்டி ஒன்பது இரவுகளும் பல்வேறு இனிப்புகளை செய்து தெய்வங்களுக்கு படைத்து வழிபடுவார்கள். இந்த ஒன்பது இரவுகளும், 9 பெண் தெய்வங்களுக்கு பிடித்த உணவுகளை படையலிட்டு வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது.


அந்த வகையில்  நவராத்திரியின் போது செய்யப்படும் உணவுகளில் மிக பிரபலமானது சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வாயாகும் . இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா எவ்வாறு செய்வது என்பதை நாம் பார்க்க இருக்கிறோம்.


பொதுவாக சர்க்கரைவள்ளி கிழங்கில் விட்டமின் ஏ, பி இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.வளர்ந்து வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. இந்த சர்க்கரைவள்ளி கிழங்கு  உடலில் சதை, எலும்புகளின் ஆரோக்கியம் , மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.


 இந்த  கிழங்கில் இருக்கும் நார்ச்சத்து , நோய் எதிர்ப்பு சக்தி ஆகியன உடலின் உள்ளே ஏற்படும் காயங்கள், வீக்கங்களை  விரைவில் குணப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல் மருத்துவ குணம் கொண்ட இந்த சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள ஃபோலேட் எனப்படும் விட்டமின், பெண்கள் விரைவாக கருத்தரிப்பதற்கு உதவுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை  தொடர்ந்து உண்பதால் வயிற்றில் ஏற்படும் அல்சர் நோய் குணமாகிறது. அதேபோல் எப்போதும் உடலை புத்துணர்ச்சியுடன், இளமையுடன் இருக்க செய்கிறது.
 சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள   மெக்னீசியம் ,பொட்டாசியம்,  போன்ற மினரல் சத்துக்கள் ,உடலில் புற்றுநோய் செல்களை மேலும் வளராமல் தடுக்கும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது.


கிழங்கு உணவுகளில் மிகவும் ஆரோக்கியமான உணவு , அது சர்க்கரைவள்ளி கிழங்காகும்.இந்த கிழங்கை பெரும்பாலானோர் பச்சையாகவும் ,சிலர் அவித்தும் சாப்பிடுவதையும் காணலாம். மேலும் பொரியல், சாம்பார், கூட்டு மற்றும் இனிப்பு வகைகள் என  சமைத்தும் சாப்பிடலாம், 


பொதுவாக சர்க்கரை வள்ளி கிழங்கு  இனிப்பு சுவையை கொண்டிருந்தாலும், இதனை தாராளமாக நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என கூறப்படுகிறது. மேலும், பச்சையாக சர்க்கரைவள்ளி கிழங்கை அதிகம் உண்பதால் வாயுத்தொல்லை ஏற்படலாம் என கூறப்படுவதால் உடலில் வாயுத் தன்மை அதிகம் உள்ளவர்கள், மருத்துவரின் அறிவுரையோடு இந்த கிழங்கை சாப்பிடலாம்.


ஆகவே இந்த சர்க்கரைவள்ளி கிழங்கை கொண்டு பல்வேறு இனிப்பு வகைகள் செய்யப்படுகின்றன. அதில் பலருக்கும் விருப்பமான உணவு தான் அல்வா. இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதத்தின் போது இனிப்பு உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.


அந்த வகையில் சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா எவ்வாறு செய்வது என்பதை நாம் தற்போது பார்க்கலாம்:


சர்க்கரைவள்ளி கிழங்கு, சர்க்கரை, நெய் மற்றும் பல வாசனைப் பொருட்களுடன் செய்யப்படும் இந்த அல்வா 20 முதல் 25 நிமிடங்களில் தயார் செய்திடலாம். முதலில் மூன்று அல்லது நான்கு சக்கரை வள்ளி கிழங்குகளை  பிரஷர் குக்கரில் வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் அந்த கிழங்கை முழுவதுமாக மசிக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கி, முந்திரி, பாதாம் போன்றவற்றை பொன்னிறமாக வறுக்கவும். 


அதே எண்ணெயில் மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை இட்டு நன்றாக பதத்துக்கு வரும் வரையில், நன்கு கலந்து குறைந்தது 3 முதல் 4 நிமிடங்களுக்கு  நடுத்தர வெப்பத்தில் வதக்கவும். சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். வாசனைக்காக, ஏலக்காய் தூள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.