மட்டன் சாப்பாடு என்றால் மயங்காத மனமில்லை. மட்டனில் தான் எத்தனை எத்தனை வெரைட்டி செய்துவிடுகிறோம். அத்தனையும் இருந்தாலும் புதிதாக இந்த மட்டன் வடையை செய்து பாருங்களேன்.


மட்டன் வடை செய்ய தேவையான பொருட்கள்:


மட்டன் கீமா 200 கிராம்
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
அரை கப் சன்னா தால்
2 டேபிள் ஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் சீரகம்
கால் டீஸ்பூன் பெருங்காயம்
அரை டேபிள் ஸ்பூன் பூண்டு பேஸ்ட்
கொஞ்சம் மல்லி இலை
1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்
தண்ணீர் தேவையான அளவு
ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கியது. கொஞ்சம் கரம் மசாலா
 உப்பு தேவையான அளவு


மட்டன் வடை செய்முறை:
 
ஒரு பெரிய பவுல் எடுத்துக் கொள்ளவும். அதில் கடலை பருப்பு, சோம்பு, சீரகம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.பின்னர் அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடலைப் பருப்பை ஊற விடவும். இது 45 நிமிடங்கள் நன்றாக ஊறட்டும். பின்னர் அதனை அரைத்து எடுத்துக் கொள்ளவும். இன்னொரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நன்றாக பேஸ்ட் பதத்திற்கு ஆக்கப்பட்ட மட்டன் கீமாவை போடுங்கள். அதில் கடலை மாவை சேர்க்கவும். கூடவே கரம் மசாலா, பெருங்காயம் சேர்க்கவும். இதில் அரைத்த கடலை பருப்பு கலவையையும் சேர்க்கவும்.


இன்னொரு பவுலில் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், மல்லி இலை சேர்க்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது எல்லாவற்றையும் ஒரே பவுலில் கொட்டவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி பின்னர் அதை தட்டையான வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். இப்போது கொதிக்கும் எண்ணெய்யில் தட்டி வைத்த வடையை போட்டு எடுத்தால் சூடான மட்டன் வடை தயார்.


மட்டன் வடை செய்த கையோடு மட்டன் கோலா உருண்டை செய்யவும் தெரிந்து கொள்ளுங்கள்: