உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியான உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது போஹா என்னும் அவல் உப்புமா. 


போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும். கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சில நிமிடங்கள் இது நன்கு சமைத்ததும், பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் கேப்சிகம் சேர்த்து வதக்கவும்.


அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். பிறகு வாணலி குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்க உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும். பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!


இது சாதாரண போஹா. இதையே முளைகட்டிய தானியங்கள் கொண்டு செய்யலாம்.
முளைகட்டிய தானியங்களில் இரும்புச் சத்தும், நார்ச்சத்தும் அதிகம். இதில் ப்ரோபயாடிக் தன்மையும் இருக்கின்றது. 


இரும்புச்சத்து நிறைந்தது: 


பொதுவாகவே அவலில் இரும்புச் சத்து அதிகம் என்பார்கள். ஆகையால் ரத்த சிவப்பு அணுக்கள் குறைபாடு உள்ளவர்கள் இதனை உண்ணலாம். கூடவே போஹாவில் கொஞ்சம் எலுமிச்சை சாறு பிழிவதால் அது அயர்ன் அப்ஸார்ப்ஸனை அதிகரிக்கும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:


முளைகட்டிய தானியங்கள் சேர்த்து செய்யப்படும் போஹாவில் வைட்டமின்களும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸும் இருப்பதால் அது உங்கள் உடலை நோய்களில் இருந்து தற்காக்கும். முளைகட்டிய தானியங்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தி நிறைவாகக் கொண்டவையாகும்.


உடல் எடை குறைப்பில் உதவும்:


போஹாவில் நார்ச்சத்து அதிகம். அதேபோல் கார்போஹைட்ரேட்ஸும் நிறைவாக இருக்கும். இது நீண்ட நேரம் பசியை தாக்குப்பிடிக்கும். இதனால் இது ஒரு நல்ல வெயிட் லாஸ் ரெஸிபி என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் கால்சியம், ஜிங், பொட்டாசியம், மான்கனீஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. 


இப்போது முளைகட்டிய தானியங்களுடன் கூடிய போஹா செய்முறையைப் பார்ப்போம்.
அவலை நன்றாக அலசி வடிகட்டிக் கொள்ளவும். இன்னொரு பவுலில் ஊறவைத்து வேகவைத்த தானியங்கள், வேகவைத்த உருளைக் கிழங்கு, சாட் மசாலா சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்னர் உப்பு, சர்க்கரை, மஞ்சல் தூள் சேர்க்கவும். பின்னர் முன்பு சேர்த்து வைத்த தானியங்களுடனான கலவையைக் கொட்டிக் கிளறவும். 30 முதல் 60 நிமிடங்கள் சமைத்தால் சத்தான சுவையான போஹா தயார்.