மனித உடலுக்கு சக்தியையும், இயக்கத்தையும் தருவது உணவாகும். இந்த உணவானது,மூச்சுக்காற்றாக, சூரிய ஒளியில் இருந்து தோலின் மூலமாக,என பல்வேறு வகைகளில் உடலால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் வாய் வழியாக,பசி என்ற உணர்வின் மூலம், உடலுக்கு தேவையான விட்டமின்கள்,கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து,கொழுப்பு மற்றும் ஏனைய உயர் சத்துக்கள் அடங்கிய, திட உணவு மற்றும் திரவ உணவு என சாப்பிடும் சாப்பாட்டின் வழியாகவே உடலுக்கு கிடைக்கிறது.
உடலின் ஆக முக்கியமான செரிமான அமைப்பு,உணவை சரியான முறையில் ஜீரணித்து,ஆற்றலாக மாற்ற வேண்டிய நேரத்தில், மனிதர்கள் நிறைய தவறுகளை செய்கிறார்கள். இதனால் உணவானது செரிமான பிரச்சனை, மந்தம், சோர்வு, தேவையில்லாத கொழுப்பாக மாற்றப்படுவது மற்றும் நிறைய உடல் சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வருகிறது. யாரும் வேண்டுமென்றே தவறுகளை செய்வதில்லை, இருப்பினும், உடலுக்கு தேவையான சரியான உணவினை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது போல, செரிமானத்திற்கு ஒத்துழைப்பது,மனிதர்களாகிய நம்முடைய கடமையாகும். ஒழுங்கற்ற செரிமானம்,உடலையும்,மனதையும் பாதித்து உங்களுடைய தினசரி வேலைகளை பாழாக்குவதோடு மட்டுமல்லாமல் நீண்டகால உடல் சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.
ஆகவே நாம் உண்ணும் திட மற்றும் திரவ உணவுகள்,வயிற்றின் செரிமான அமைப்புகளால் செரிக்கப்பட்டு,ஆற்றலாக உடம்பில் மாறும் நேரத்தில் செய்யக்கூடாத வேலைகள் என்ன என்பதை பார்ப்போம்.
சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்:
சாப்பிட்டவுடன் ஆக குறைந்தது, ஒரு மணித்தியாலங்களுக்கு, கடுமையான எந்த வேலைகளையும் செய்யக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சியை செய்யவே கூடாது. இது உடல் சார்ந்த பல பிரச்சனைகளை கொண்டு வரும். சாப்பிட்டவுடன் உடம்பில் இருக்கும் ரத்தமானது,வயிற்றுப் பகுதியை சுற்றி செரிமானத்திற்கு உதவி செய்யும்.பின்னர் இது ஆற்றலாக மாற்றப்பட்டு,உடல் முழுவதற்கும், ரத்தத்தின் வழியாக பகிரப்படும்.
உடற்பயிற்சி செய்வதன் மூலமாக இந்த வேலையானது தடைப்பட்டு, உடம்பில் எந்த பகுதியில் உடற்பயிற்சி செய்யப்படுகிறதோ, அந்தப் பகுதிக்கு அனைத்து ரத்தமும் வந்துவிடும். இது செரிமான அமைப்பில், மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி செரிமானம் தாமதமாவது அல்லது கொழுப்பாக மாறுவது அல்லது வாயத் தொல்லைகளை உருவாக்குவது என நிறைய பிரச்சனைகளை கொண்டு வரும். இது ஒரு புறம் என்றால், சாப்பிட்டு பிறகும் உடற்பயிற்சி செய்யும் போதும் உள்ளுறுப்புகளில் தசைநார்கள் சேதம் அடைவதற்கு, மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் சாப்பிட்டவுடன் உடற்பயிற்சி செய்வது அறவே தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்:
வேக வைத்த தானியங்கள், அரிசி மற்றும் இறைச்சி போன்ற உணவுகளை உட்கொண்ட பிறகு பழங்களை சாப்பிடக்கூடாது எனில் மேற்கண்ட உணவு பொருட்கள் செரிமானம் அடைவதற்கு சுரக்கும் செரிமான சுரப்புகள், சாப்பிட்ட உடலுக்கு உணவு பொருளுக்கு ஏற்றார் போல மட்டுமே வேலை செய்யும்.மற்றொரு வகை எளிதாக செரிமானம் ஆகக்கூடிய கூடிய, உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, செரிமான கோளாறு உண்டாகும். ஆகவே ஒத்து வராத இரு வகையான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்க வேண்டும்:
சாப்பிட்ட பிறகு குளிப்பதும் செரிமான பிரச்சனைகளை கொண்டு வரும் குளிக்கும்போது உடலின் வெப்ப நிலை மாற்றமடைகிறது இதனால் ரத்தமானது தோளின் வெப்பநிலை மாறுபாட்டை சரி செய்ய வேலை செய்யும் இதனால் உண்ட உணவானது சரியாக செரிக்கப்படாமல் பிரச்சனைகளை தரும்.
மது அருந்துவது மற்றும் டீ காபி குடிப்பதை தவிர்க்கவும்:
இது போலவே மது அருந்துவது மற்றும் டீ காபி குடிப்பதும் சாப்பிட்ட உணவு செரிமானமாகாமல் போவதற்கு காரணமாகிறது.
சாப்பிட்டவுடன் தூங்குவதை தவிர்க்கவும்:
சாப்பிட்டு உடன் தூங்குவதும் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தூங்கும் பொழுது உள்ளூர் பூக்கள் ஓய்வு நிலைக்கு திரும்பும் என்பதால் செரிமானத்திற்கு தேவைப்படும் ரத்தமானது வயிற்று பகுதியை சென்று அடையும். இந்நாளில் இது அதிகப்படியான பொறுப்பாகவும் வாயு தொல்லைகள் செரிமான கோளாறுகளை உண்டு செய்யும்.
ஆகவே தெரிந்தும் தெரியாமலும் இவ்வளவு நாட்கள் சாப்பிட்டதற்கு பிறகு மேற்கண்ட தவறுகளை செய்திருந்தால் இனி அவற்றை தவிர்த்து உடலின் செரிமானத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்