இட்லி-தோசை முதல், களி கேப்பக்கூழு வரை தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் செய்வதற்கான உணவுக் குறிப்புகள்.


தென்னிந்திய உணவுகளின் ரெசிப்பிகள்:


1)மகத்தான மசாலா தோசை 


தேவையான பொருட்கள்



  • தோசை மாவு-ஒரு கப்

  •  உருளைக்கிழங்கு-2

  • நறுக்கிய பச்சை மிளகாய்-5

  • பொடியாக நறுக்கிய வெங்காயம்-2

  • பொடியாக நறுக்கிய இஞ்சி-1 டீஸ்பூன்

  • கடுகு- ஒரு டீஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன்

  • கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்

  • மஞ்சள் தூள்-அரை டீஸ்பூன்

  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி

  • எண்ணெய், உப்பு-தேவையான அளவு

  • ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்




செய்முறை:



  1. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்

  2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை ஊற்றவும். அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கடலைப் பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

  3. அவை வதங்கியவுடன் அதில் பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

  4. மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஒரு நிமிடம் வேக வைத்து இறக்கினால், மசாலா தயராகிவிடும். 

  5. தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், தோசை மாவு கொண்டு தோசை ஊற்றவும். 

  6. தோசை மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மொறுமொறுப்பானதும், தோசையின் நடுவே உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, தோசையை மடித்து எடுத்தால், சுவையான மசாலா தோசை தயாராகிவிடும். 


2)சுவையான பொடி இட்லியை சுவைக்க தயாரா?


தேவையான பொருட்கள்


கீழ்காணும் பொருட்களை உங்களுக்கு தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளுங்கள்



  • இட்லி மாவு

  • கடுகு

  • கரிவேப்பிலை-கொத்தமல்லி

  • நல்லெண்ணை

  • உளுத்தம் பருப்பு

  • கடலைப் பருப்பு 

  • மிளகு, சீரகம்

  • உப்பு

  • பெருங்காயப்பொடி




செய்முறை:



  1. கறிவேப்பிலை இலைகளை கழுவி காயவைத்து இரண்டு மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும்.

  2. எண்ணெய் சேர்க்காமல், காய்ந்த மிளகாயை மிதமான சூட்டில் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. பிறகு உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சில நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

  4. வறுத்த பொருட்களை ஆற வைத்து ஆறியதும் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொண்டால், இட்லிக்கான பொடி தயார்.

  5. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதனுடன் இட்லிகளை சேர்த்து கலக்கவும்.

  6. அதனுடன் இரண்டு தேக்கரண்டி இட்லி பொடியினை மற்றும் நெய் சேர்த்து மென்மையாக வதக்கவும்.

  7. கிளறியபின் சிறிது கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பொடி இட்லி தயார்.


3)ஆரோக்கியம் தரும் கேழ்வரகு களி


தேவையான பொருட்கள்



  • கேழ்வரகு மாவு-ஒரு கப்

  • நெய் மற்றம் உப்பு தேவையான அளவு


 


செய்முறை



  1. கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். 

  2. தண்ணீர் கொதிவந்ததும் கேழ்வரகு மாவு சேர்த்து கிளறிவிடாமல் வேகவிடவும்.

  3. கேழ்வரகு பாதி வெந்ததும், ஒரு மரக்கறண்டியைக் கொண்டு கட்டி இல்லாமல் கிளறிவிடவும். மாவு நன்றாக வெந்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

  4. கடைசியில் நெய் தடவி, கையை ஈரமாக்கிக் கொண்டு ஒவ்வொருப் பிடியாக எடுத்து உருண்டையாக்கிக் கொள்ளவும்.

  5. இதனுடன் கருவாட்டுக்குழம்பை சேர்த்து சாப்பிட்டால் வேற லெவலில் இருக்கும்.




4)நினைத்தாலே எச்சில் ஊரும் குழி பணியாரம்


தேவையான பொருட்கள்



  • ஜவ்வரிசி மற்றும் புழுங்கலரிசி

  • உளுந்து

  • வெந்தயம்

  • தேவாயான அளவு உப்பு

  • எண்ணெய்

  • பச்சை மிளகாய்

  • கறிவேப்பிலை


செய்முறை:



  1. புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைக்கவும். 2 மணி நேரம் கழித்து மென்மையாக அறைக்கவும். 

  2. ஜவ்வரிசியை அரைப்பதற்கு முன்னர் 10 நிமிடத்திற்கு ஊற வைத்து, உளுந்துடன் சேர்த்து அறைக்கவும். 

  3. அரைத்த மாவை, உப்பு சேர்த்து 5 மணி நேரம் புளிக்கவிடவும்.

  4. வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

  5. வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி மாவில் சேர்க்கவும். 

  6.  சிறிது எண்ணெய் விட்டு, குழி பணியார சட்டியை சூடாக்கி, மாவை குழிகளில் ஊற்றவும்.

  7. அப்படி ஊற்றிய மாவை இருபுறமும் வேகவிட்டு எடுத்தால், சுவையான குழிபணியாரம் தயார்.

  8. குழிப்பணியாரத்துடன் காரச்சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட்டால் அம்புட்டு சுவையாக இருக்கும். 




5)காரசாரமான கோங்கரா சட்னி


தேவையான பொருட்கள்



  • புளிச்ச கீரை – ஒரு கட்டு

  • புளி –சிறிய

  • பூண்டு – 15 பல்

  • மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்

  • காய்ந்த மிளகாய் – 2

  • வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்

  • தனியா (விதை) – 1 டீ ஸ்பூன்

  • கடுகு – 1 டீ ஸ்பூன்

  • சீரகம் – 1/2 டீ ஸ்பூன்

  • பெருங்காயம் – சிறிதளவு

  • மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்

  • உப்பு – தேவையான அளவு

  • எண்ணெய் – 1 கப்




செய்முறை:



  1. புளிச்ச கீரையை கழுவி பொடியாக நறுக்கி காயவைக்கவும். அதன் பின்னர் புளியை கழுவிவிட்டு சிறிதளவு வெந்நீர் விட்டு ஊறவைக்த்துக்கொள்ளவும்

  2. வெந்தயம் மற்றும் தனியாவை எண்ணெயில்லாமல் வறுத்து, அவை ஆறிய பின் மிக்சியில் இட்டு நொறுநொறுப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

  3. புளி தண்ணீர் மற்றும் பூண்டை ஒன்றாக அரைத்து வைக்கவும்.

  4. ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கீரையை இட்டு அதில் உள்ள நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

  5. கொஞ்சம் எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், மீதமுள்ள பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் ஆகிவற்றை சேர்த்து முன்னர் வதக்கியுள்ள கீரையோடு சேர்க்கவும்.

  6. இதனுடன் அரைத்துவைத்துள்ள பொடி, மிளகாய் தூள் உப்பு மற்றும் புளி கலவையை சேர்க்கவும். 

  7. நன்றாக கிளறினால் நாம் விரும்பிய கோங்குரா சட்னி தயார். 

  8. கோங்கரா சட்னியுடன் சாதம், தோசை, இட்லி, பனியாரம் என அனைத்தையும் சேர்த்து சாப்பிடலாம்.