நமது சமையலில் ஏராளமான கீரை வகைகளை பயன்படுத்துகிறோம். அந்த வகையில் இந்தியாவில் நூற்றுக்கணக்கான கீரை வகைகள் இருக்கின்றன .அதிலும் நாம் உணவில் எத்தனை வகைகளை சேர்த்துக் கொள்கிறோம் என்பதே முதல் கேள்வியாகும். பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் கீரை வகைகளில் எண்ணிலடங்காத விட்டமின்கள் நிறைந்துள்ளன .இவை உடலுக்கு அதிகளவான  கலோரிகளை வழங்கி கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுகிறது. 


பொதுவாக ஆடு , மாடுகள், கோழிகளை பொறுத்த அளவில் இவை கீரை உள்ளிட்ட இலை வகைகளை தான் உண்ணுகின்றன. அவை அளவான உடலுடனும், சுறுசுறுப்புடனும்  எப்போதுமே இருப்பதை நாம் பார்க்கிறோம். ஆகவே இந்த பச்சை இலை காய்கறிகள் என்பது உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும் புத்துணர்வையும் தரக்கூடியது.


 ஆகவே இந்த கீரை வகைகளை நாம் ஒவ்வொரு நாளும் உணவாக எடுத்துக்கொள்ளும்போது , உடல்  அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல்பாட்டுக்கும் , வாழ்நாள் முழுவதும் ஆயுள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கான சக்தியை அது வழங்குகிறது. ஆகவே வெந்தயக்கீரை என்பது ஒரு குளிர்ச்சியான உணவாகும். இந்தக் கீரையை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நமது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை அது வழங்குகிறது. ஆகவே இந்த வெந்தயக் கீரையை நாம் விதவிதம் விதவிதமாக எவ்வாறு செய்து சாப்பிடலாம் என பார்க்கலாம்.


இந்த வெந்தயக் கீரைகள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது. இந்த வெந்தயக்கீரை அதிகளவாக வட மாநில மக்களால் குளிர்காலத்தில் உண்ணப்படும் முக்கிய உணவாக இருக்கிறது. வெந்தயக்கீரை முட்டை வறுவல், வெந்தயக்கீரை ஆலு பரோட்டா, வெந்தயக்கீரை ரொட்டி , வெந்தயக் கீரை உருளைக் கிழங்கு வறுவல் என பல்வேறு உணவுகளில் இந்த வெந்தய கீரையை கலந்து பயன்படுத்துகிறார்கள்.


இந்த உணவு வகைகள் பெரும்பாலும் வட மாநில மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது.


வெந்தயக் கீரையில் விட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. இது ஜீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது.முக்கியமாக கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகளை இந்த வெந்தயக் கீரை நீக்கி சரி செய்கிறது.  அதேபோல் உடலில் ஏற்படும் சொறி சிரங்குக்கு சிறந்த மருந்தாகிறது. 


சிறந்த பத்திய உணவாக கூறப்படும் இந்த வெந்தயக் கீரையை அரைத்து, நெய் சேர்த்து சோறுடன் பிசைந்து சாப்பிட்டால் அதுவும் டயட் உணவுக்கு பலனளிக்கும். அதுமட்டுமல்லாமல் தற்போது எல்லோரையும் வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த சர்க்கரை நோய்க்கு, இந்த வெந்தயக்கீரை நல்ல ஆறுதலாக அமைகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உணவில் இந்த வெந்தய கீரையை நாம் சேர்த்துக்கொள்ளும்போது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் பலனளிக்கலாம் என மருத்துவர்களும் பரிந்துரைக்கிறார்கள்.


ஆகவே எப்போதுமே மதிய நேரத்தில் ஒரே உணவை சமைத்து சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டிருக்கும்.  இந்த வெந்தயக் கீரை உணவுகளை முயற்சித்து பாருங்கள்.


வெந்தயக்கீரை முட்டை வறுவல்:
(அண்டா மெத்தி புர்ஜி)


முட்டை வறுவல் என்பது  இயற்கையாகவே சுவையாக இருக்கும், அதிலும் வெந்தயக் கீரையை சேர்த்து முட்டை வறுவல் செய்வது என்பது, ஒரு அழகான நறுமணத்தையும் சுவையையும் வழங்கி மெருகூட்டுகிறது. ஆகவே எளிமையான முறையில் வீட்டில் இதனை எவ்வாறு செய்யலாம் என நாம் பார்க்கலாம்:


 தேவையான பொருட்கள்:


250 கிராம் வெந்தயக்கீரை 
2 வெங்காயம்,
2 தக்காளி
1-2 பச்சை மிளகாய்
1 டீஸ்பூன் பூண்டு 
1 தேக்கரண்டி இஞ்சி
1 தேக்கரண்டி சீரகம்
ஒரு சிட்டிகை பெருங்காயம்
1 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1 தேக்கரண்டி கரம் மசாலா 
ருசிக்க உப்பு
 சிவப்பு மிளகாய் தூள்
அழகுபடுத்த கொத்தமல்லி 
5 முட்டைகள்


செய்முறை:


1. முதலில் ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெயை சூடாக்கவும், அதில் சீரக விதைகளை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.


2. பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.


3. அத்துடன் தக்காளி மற்றும் பூண்டு, உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி விதைகள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.


4. பின்னர் அதனுடன் வெந்தயக் கீரைகளை சேர்த்து அவை நன்கு வாடும் வரை வதக்கிக் கொள்ளவும். தற்போது இந்த வெந்தயக் கீரை கலவையில் முட்டைகளை உடைத்து விட்டு நன்கு தூள் தூளாக கலக்கும் வரை கிளறவும். 


5. இறுதியாக வெந்தயக் கீரை முட்டை கலவையில் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வறுத்து,  கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்துக் கொள்ளலாம்.



2. வெந்தயக் கீரை சப்பாத்தி: 
(மேதி அஜ்வைன் பரந்தா)


இந்த வெந்தயக் கீரை சப்பாத்தியானது செய்வதற்கு எளிதானது மட்டுமல்ல மிகவும் சுவையானதாகும். இந்த வெந்தயக் கீரை சப்பாத்தியை செய்வதற்கு தயிர் ,வாழைப்பழம் போன்ற சில பொருட்களையும் நாம் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு சேர்த்து செய்யப்படும் வெந்தயக்கீரை சப்பாத்தி ஆனது நன்கு மொறுமொறுப்பாகவும் மிருதுவாகவும் இருக்கும்.


தேவையான பொருட்கள்:


8 கப் கோதுமை மாவு
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி ஓமம் 
1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய், 
வெந்தயக்கீரை 
1 டீஸ்பூன் நெய்/எண்ணெய், 
12 கப் (காராமணி)  பீன்ஸ் நன்கு அரைத்தது


செய்முறை:


1. ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கோதுமை மாவைப் போடவும்.


2. அந்த கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக கலக்கவும். அதனுடன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.


3. பின்னர் படிப்படியாக தண்ணீர் சேர்த்து நன்கு  மாவு சப்பாத்தி பதத்திற்கு வரும் வரை பிசைய வேண்டும். அதனை 15-20 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.


4. 20 நிமிடம் கழித்து பிசைந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள்.


5. பிடித்து வைத்த மாவு உருண்டைகளை எடுத்து சப்பாத்தி தட்டுவது போல் நன்கு வட்ட வடிவில் உருளையின் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.


6 . பின்னர் அடுப்பில் சப்பாத்தி சுடும் தவாவை வைத்து மிதமான தீயில், நன்கு நெய் விட்டு, ஒவ்வொரு சப்பாத்தியா சுட்டு எடுக்கவும்.


7 . நீங்கள் செய்த வெந்தயக் கீரை சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம் அல்லது உங்களுக்கு விருப்பமான சைடிஷ் உடன் உண்ணலாம்.


3. வெந்தயக்கீரை கொண்டக்கடலை குழம்பு:
(மெத்தி சோல்)


பொதுவாக கொண்டைக்கடலை ஒரு தானிய வகையைச் சேர்ந்தது. நாம் அதனை காலை நேர உணவுகளில், அல்லது சிற்றுண்டி வகைகளில் சேர்த்துக் கொள்கிறோம். அதேபோல் இந்த கொண்டைக்கடலையையும், வெந்தயக் கீரையையும் சேர்த்து வடமாநில மக்கள் குழம்பாக, சைடிஷ் ஆக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த குழம்பு பூரியுடன் தொட்டு சாப்பிடுவதற்கு சிறந்தது என கூறப்படுகிறது. முதலில் நேரத்தை நாம் மிச்சப்படுத்துவதற்கு கொண்டைக்கடலையை குறைந்தது 5-6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். அப்போது தான் அதனை வேகமாக அவித்தெடுக்கலாம்.



1- 1/2 கப் வெள்ளை கொண்டைக்கடலை
 6 மணி நேரம் ஊறவைக்கவும்
2 கப் வெந்தயக்கீரை
1 டீஸ்பூன் நெய்
1 தேக்கரண்டி சீரகம் (ஜீரா)
1 பட்டை இலை 
2 வெங்காயம், 
6 பூண்டு 
1 துண்டு இஞ்சி, 
1 பச்சை மிளகாய், 
உப்பு சுவைக்க
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்
1/2 டீஸ்பூன் சீரக தூள்
1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 
2 தக்காளி



செய்முறை:


1.முதலில் ஊறவைத்த கொண்டைக்கடலையை அடுப்பில் வைத்து ஏழு எட்டு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும்.


2.கடாயில் நெய்யை இட்டு சூடாக்கி அதில், சீரகம், பட்டை இலை, நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை நன்கு வதக்கவும். அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு  வதங்கும் வரை கிளறவும்


3.அடுத்து, தக்காளி நன்கு வதங்கியதும்  வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்ளவும். மேலும் அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து  தாளிக்கவும்.


4.இறுதியாக வேகவைத்த கொண்டைக்கடலையை அதில் கொட்டி எல்லா மசாலாக்களும் நன்கு கலக்கும் வரை கிளறவும். 


5. பின்னர் இறுதியாக வெந்தயக் கீரை கொண்டைக்கடலை நன்கு கெட்டியாக குழம்பானதும் இறக்கி பரிமாறிக் கொள்ளலாம்.



4. வெந்தயக் கீரை தானிய சப்பாத்தி:
(மெத்தி தெப்லாஸ்)


வெந்தயக்கீரை மற்றும் எல்லா தானியங்களின் மாவையும்  சேர்த்து செய்யப்படும் இந்த சப்பாத்தி வகையானது குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இது கோதுமை மாவு, கடலை மாவு, கம்பு மாவு , உளுந்து மாவு என ஏராளமான தானிய வகைகளின் மாவை ஒன்று சேர்த்து இந்த சப்பாத்தி வகை செய்யப்படுகிறது. இதில் ஏராளமான மசாலா பொருட்களும் சேர்க்கப்படுகிறது. வெந்தயக் கீரையுடன் செய்யப்படும் இந்த சப்பாத்தியானது மிகவும் மென்மையான சுவையைக் கொண்டதாகும்.


 தேவையான பொருட்கள்


கோதுமை மாவு, 
கடலை மாவு
 கம்பு மாவு 
உளுந்து மாவு
சிவப்பு மிளகாய் தூள், 
மஞ்சள் தூள், 
மல்லி தூள், 
சீரக தூள், 
ஓமம்
 போதுமான அளவு உப்பு 
இரண்டு கப் வெந்தயக்கீரை
இரண்டு பச்சை மிளகாய்
ஒரு துண்டு இஞ்சி நறுக்கியது


செய்முறை:


1. சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கம்பு மாவு, கடலை மாவு, உளுந்து மாவு போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.


2. பின்னர் அதில் பச்சை மிளகாய், இஞ்சி ,வெந்தயக்கீரை, உப்பு, மிளகாய்த்தூள் ,ஓமம், சீரகம் போன்றவற்றை மாவுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.


3. பின்னர் குறித்த மாவு கலவையில் சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி பதத்திற்கு நன்கு பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இசைந்த மாவை ஒரு 15 நிமிடங்கள் மூடி அப்படியே வைக்க வேண்டும்.


4. தொடர்ந்து 15 நிமிடங்களின் பின்னர் மூடி வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.


5. மாவு உருண்டைகளை சப்பாத்தி உருளையின் வைத்து நன்கு வட்ட வடிவமாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.


6. பின்னர் கடாயை நன்கு சூடாக்கி அதில் நெய் ஊற்றி சப்பாத்தியின் இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாகும் வரை சமைத்து இறக்கி பரிமாறவும்.



5. வெந்தயக் கீரை கேரட் பொரியல்:
(கஜர்-மேத்தி சப்ஜி)


வெந்தயக்கீரை மற்றும் கேரட் கொண்டு செய்யப்படும் இந்த பொரியலானது வடமாநிலங்களில் குளிர்காலத்தில் மிகவும் பிரபலமான உணவாகும்.
இதனை நாம் எளிதாகவும், விரைவாகவும் வீட்டிலேயே செய்யலாம். இது தோசையுடன் தொட்டு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான பொரியலாகும்.


தேவையான பொருட்கள்:


1/2 கிலோ கேரட்
250 கிராம் வெந்தய கீரை 1தேக்கரண்டி வெந்தய விதைகள்
2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள்
உப்பு சுவைக்க
1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
3-4 முழு சிவப்பு மிளகாய்
1/2 கப் கடுகு எண்ணெய்


செய்முறை:


1. முதலில் கேரட்டை நன்கு சுத்தப்படுத்தி அதனை சிறு சிறு துண்டுகளாக சதுர வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.


2. கடாயில் எண்ணெயை சூடாக்கி வெந்தய விதைகள் மற்றும் வெட்டிய முழு சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும்.


3. அத்துடன் நறுக்கிய கேரட் மற்றும் வெந்தய கீரைகளை சேர்த்து நன்கு வதங்கும் வரை கிளறவும்.


 4. பின்னர் அதில் உப்பு, மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போன்றவற்றை சேர்த்து வதக்கவும்.


5. வெந்தயக்கீரை  ,கேரட் மென்மையாகும் வரை சமைத்து இறக்கி சூடாக பரிமாறலாம்.