அழகை வெளிப்படுத்துவதில் முதல் இடம் இந்த முடிக்கு உண்டு. முடி வளர்ப்பது, அதை அழகாக அலங்கரித்துக்கொள்வது, பூ சூடி கொள்வது என ஒரு பக்கம், அழகை வெளிப்படுத்தினாலும், பிடித்த நிறத்தில் முடிக்கு சாயம் பூசி, முடியின் நிறத்தை மாற்றி கொள்வது, விரும்பியபடி முடி வெட்டிக்கொள்வது, என முற்றிலும் மாறுபட்ட விதத்தில் அழகு வெளிப்படுத்தப்படுகிறது. இதை எல்லாம் விட சிலருக்கு இளம் வயதில் முடியின் நிறம் மாறி வெள்ளை முடி தெரிய ஆரம்பிக்கும். இன்றைய நவீன காலத்தில் முடிக்கு பல்வேறு சாயங்களை பூசுவது, வீட்டிலே அவரவர் விருப்பத்திற்கு செய்து கொள்கின்றனர். இதனால் உடலுக்கு நிறைய பிரச்சனைகள் வரும். அதாவது,ஒவ்வாமை, எரிச்சல், கலரிங் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க ஸ்ட்ராண்ட் டெஸ்ட் - Strand Test செய்வது அவசியம்.
இந்த ஸ்ட்ராண்ட் டெஸ்ட் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். ஸ்ட்ராண்ட் டெஸ்ட் கிட் மெடிக்கல் அல்லது கடைகளில் இருக்கும். டெஸ்ட் கிட் வாங்கி அதில் இருக்கும் கையுறையை முதலில் அணிந்து கொள்ளுங்கள். கையுறையை அணிந்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது. ஏனென்றால், சாயத்தில் இருக்கும் நச்சுகள் தோலின் வழியே உடலுக்கு செல்வது தடுக்கப்படும். பின்னர் ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து, அதில் கிட் இல் கொடுக்க பட்ட டெவெலப்பரை சாயத்துடன் கலந்து கொள்ளவும். முடியின் முடியில் இதை கலந்து கொள்ளவும். ஏதேனும் ஒரு பக்கம் கொஞ்சமாக தடவி வைத்து பின்னர் அதை கழுவி கொள்ளவும். 24 மணிநேரம் வரை ஏதும் செய்ய வேண்டாம். இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒவ்வாமை, எரிச்சல், அரிப்பு ஏதேனும் தலையில் ஏற்படுகிறதா என கவனித்துக்கொள்ளவும்.
ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றும். ஏதேனும் குறிப்பிட தக்க ஒவ்வாமை அறிகுறிகள் இல்லை என்றால் நீங்கள் தொடர்ந்து கலரிங் செய்யலாம்.
ஸ்ட்ராண்ட் டெஸ்ட் அனைவருக்கு செய்ய வேண்டுமா?
- கலரிங் செய்ய விருப்பப்படுபவர்கள் அனைவரும் இந்த டெஸ்ட் எடுத்து கொள்ள வேண்டும்.
- கலரிங் செய்த பிறகு, ஒவ்வாமை வந்து அவதிப்படாமல் தவிர்க்க முடியும்
- அனைத்து நிறமும் அனைவருக்கும் ஒத்து வராது . உங்களுக்கு எந்த நிறம் ஏற்றதாக இருக்கும் என தெரிந்துகொள்ளலாம்.
- உங்களுக்கு ஒவ்வாமை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
- சிலருக்கு ஒவ்வாமை இருப்பது கூட தெரியாமல் இருக்கும். அவர்களுக்கு இந்த டெஸ்ட் செய்து தெரிந்துகொள்ளலாம்