பள்ளி மாணவர்கள் அதிகமாக எலக்ட்ரானிக் கேசட்களை பயன்படுத்தால் அதிகரிக்கும் ஸ்க்ரீன் டைம் காராணமாக கண்கள் உலர்ந்து போகும் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கண் ஆரோக்கியம்:
கண்களை ஆரோக்கியமாக பாதுகாப்பது மிகவும் அவசியமானது. கண்னி, ஸ்மார்ட்ஃபோன், தொலைக்காட்சி ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், இவை வாழ்வின் அடிப்படையான ஒன்றாக மாறிவிட்டது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்க்ரீன் டைம் என்பது மிகவும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அகமதாபாத் நகரிலுள்ள பி.ஜெ. மெடிக்கல் கல்லூரி, ராஜ்கோட், சாட்னா ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை கல்லூரி மூன்றும் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. குழந்தைகள், சிறுவர்கள் 3 முதல் 3.5 மணி நேரமோ அல்லது அதற்கு அதிகமாகவோ ஸ்மார்ட்ஃபோன் பார்த்தால் அவர்களுக்கு கண்கள் உலர்ந்து போகும் ( dry eye disease (DED)) பாதிப்பு ஏற்படுவதற்கான பாதிப்பு அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
கண்களில் வறட்சி ஏற்படுவது ஏன்?
கண்களை ஆரோக்கியமான பாதுகாக்க அதில் இயற்கையாகவே தினமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருக்கும். இது கண்களுக்கு தேவையான ஈரப்பதத்தைத் தரும். கண்களை மாசு இல்லாமல் பாதுகாக்கவும் இது உதவும். கண்களுக்கு ஓய்வு இல்லாமல் அதிகமாக வேலை கொடுத்தால் இந்த தண்ணீர் உற்பத்தியின் அளவு குறைந்துவிடும் அல்லது சீராக இருக்காது.
கண்கள் உலர்ந்து போதல், கண்களுக்குள்ளே கண்ணீர் மிக விரைவாக உலர்ந்து போதல், கண்களில் அசெளகரியம் ஏற்படுதல், கண்கள் சிவப்பாக மாறுதல், பார்வையில் சிக்கல் உள்ளிட்டவை கண்களில் வறட்சி காரணமாக ஏற்படும் பிரச்சனைகள் ஆகும்.
மோசமான பாதிப்பு:
இந்தியன் ஜர்னல் ஆஃப் ஆப்தமாலஜி என்ற ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில்,” ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூடுதலாக கணிணி/ தொலைக்காட்சி பயன்பாடு கண்கள் உலர்ந்து போகும் நிலையை தீவிரப்படுத்தும். கூடுதலாக, குழந்தைகளை பள்ளி செல்லும் வயதில் இருக்கும் சிறுவர்களை இது மோசமாக பாதிக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற 90 சதவீதம் பேர் பள்ளி மாணவர்கள். 11 வயதுக்குட்ப 462 மாணவர்கள் கண்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் கண்கள் வறட்சியாக இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் பள்ளி மாணவர்களில் சிலருக்கு பார்வை மங்குதல், கண்களில் எரிச்சல், கண்கள் சிவப்பாக இருப்பது உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். கல்வி கற்பதற்காகவே பள்ளி மாணவர்கள் 8-10 மணி நேரம் ஸ்க்ரீன் நேரம் இருப்பதாக ஆய்வில் மேற்கொள்ளப்பட்டது. ஸ்க்ரீன் டைம் அதிகரிப்பதால் மாணவர்களிடம் கண் சிமிட்டுவது சராசரியாக இருப்பதை விட அதிகரித்துள்ளதாக அய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு சொல்வது என்ன?
இந்த ஆய்வில் 20% மாணவர்களுக்கு கண்கள் உலர்ந்துபோதும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இது தீவிர நிலை இல்லை என்றும் ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்கு கல்வி வேலைகளை செய்வதற்காக குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை கணினி பயன்படுத்துவதாகவும் எக்ஸ்ட்ராகரிக்குளர் ஆக்டிவிட்டிக்காகவும் 45 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரையும் எலக்ட்ரானிக் கேஜட்களை பயன்படுத்தாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள், வீடியோக்கள் பார்ப்பதற்காக 2-3.5 மணி நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதாகவும் மாணவர்கள் சர்வேயில் குறிப்பிட்டுள்ளனர்.
எட்டு வயதான சிறுவர்களின் ஒரு நாளின் சராசரியாக இரண்டு மணி நேரம் 19 நிமிடங்கள் ஸ்க்ரீன் டைம் என்று தெரிய வந்துள்ளது. கணினி, ஸ்மார்ஃபோன்,டேப்லெட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கேசட்கள் இல்லமால் அன்றாக வாழ்க்கை இல்லை என்பது சாத்தியமில்லை என்ற நிலையாகிவிட்டது. இருப்பின்மும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆய்வு பரிந்துரைக்கிறது.
சிறுவர்களுக்கான ஸ்க்ரீன் டைம்:
சிறுவர்களுக்கு ஸ்க்ரீன் டைம் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதோடு, பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கான வீட்டுப்பாடத்தை டிஜிட்டல் முறையில் வழங்காமல் இருக்கலாம். 20-20-20 என்ற விதியை அனைவரும் பின்பற்றலாம்.
20 நிமிடங்கள் கணினி பயன்பாட்டிற்கு பிறகு, 20 அடி தூரம் உள்ள ஏதாவது ஒரு பொருளை 20 நொடிகள் பார்ப்பது நல்லது. கண்களுக்கு ப்ரேக் கிடைத்தமாதிரி இருக்கும் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.