காலில் இருந்து காமம் தொடங்குமா? பாதங்கள், விரல்கள், கணுக்கால் இவை காமத்தை தூண்டுமா? இப்படி ஒரு சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்.
இதை சற்று சினிமாத்தனமாக இருந்தாலும் சினிமாவில் இருந்தே உதாரணங்களை எடுத்துக் கொண்டு தொடங்கலாம்.
பெண்ணின் கால்களை, பாதங்களை, விரல்களைப் பாடாத கவிஞன் இல்லை எனலாம்.
உனது பாதம் அடடட இலவம் பஞ்சு
நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
இவையெல்லாம் சிற்சில உதாரணங்கள் தான். இதுபோன்று பற்பல பாடல்கள் உள்ளன. சரி இப்போது நாம் கால்களும் காமமும் அறிவியல் ரீதியாக எப்படி இணைந்திருக்கின்றன என்று பார்ப்போம்.
கால்கள் மீதான ஈர்ப்பு நபருக்கு நபர் வேறுபடலாம். ஒரு சிலருக்கு பெண்ணின் கால்களைப் பார்த்தாலே மூட் வரலாம். சிலருக்கு விரல்களில் இருக்கும் நகப்பூச்சோ அல்லது கணுக்காலை அலங்கரிக்கும் நகைகளோ மூடை உண்டாக்கலாம். சிலருக்கு பெண்ணின் காலை நீவி விடுவதிலேயே கூட பாலியல் இச்சை பூர்த்தியான திருப்தி கிடைக்கலாம்.
இது இயல்பானதா?
அட இது இயல்பானது தானா என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஆம், இது இயல்பானது என்றே ஆய்வு கூறுகிறது. ஆடையால் ஈர்க்கப்படுவது, இசையால் தூண்டப்படுவது போல் இதுவும் இயல்பானதாகவே கருதப்படுகிறது. நமது பாதங்களில் நரம்பு சுழற்சி முடிவடைவதால், நெர்வ் எண்டிங் எனப்படும் அந்தப் புள்ளியில் உணர்ச்சியும் அதீதமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால், சில ஆண்கள் பெண்ணின் பாதத்தை, காலைத் தொடுவதா அது ஓர் ஆணுக்கு இழிவானது என்றும் கருதக்கூடும். இது உளவியல் ரீதியானது எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், தன் இணையருக்கு தனது கால்களில், பாதங்களில், விரல்களில் தான் மோகம் அதிகம் என்று தெரிந்து கொண்டால் ஒரு பெண்ணும் அதை வைத்து ஆணை அடக்கி ஆள முற்படும் போக்கும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.
சிலருக்கு பெண் ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தால் பிடிக்கும். சிலருக்கு சாக்ஸ், ஸ்டாக்கிங்ஸ் அணிந்திருந்தால் பிடிக்குமாம்.
ஆரம்ப காலத்தில் ஓர் ஆணுக்கு தனது தேவைகள் பற்றி பெண்ணிடம் சொல்லவா அல்லது ஒரு பெண்ணுக்கு தனது விருப்பங்களை ஆணிடம் சொல்லவா தயக்கம் இருக்கலாம். ஆனாலும், இருவரும் எப்போதுமே வெளிப்படையாக இது போன்ற விஷயங்களைப் பேசினால் இன்பம் கேரண்டி என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல். படுக்கையறையில் உண்மையாக இருங்கள். அதேபோல் பெண்ணிடம் மென்மையாக அணுகுங்கள். எதையும் தடலாடியாக செய்யாமல் படிப்படியாக அவரின் விருப்பமோ தேவையோ அறிந்து செயல்படுவது அவசியம். மேலும், சரியான தருணம் என்று ஒன்றிருக்கிறது. அந்தத் தருணம் வாய்க்கும்போது விருப்பங்களை சொல்லி நிறைவேற்றிக் கொள்வது ஆண், பெண் இருவருக்குமே ஒரு த்ரில் உணர்வைத் தரும்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கவுதம் மேனன் இரண்டு இடங்களில் கார்த்திக் ஜெஸ்ஸியின் கால்களின் மீது கொள்ளும் மோகத்தை வெளிப்படுத்தியிருப்பார். ஒருமுறை பைக்கில் ஏறும் ஜெஸ்ஸியின் காலை பார்ப்பார். இன்னொரு முறை ரயிலில் ஜெஸ்ஸியின் காலைத் தொட்டு காதலை வெளிப்படுத்துவார். ஓமணப் பெண்ணே பாடலில் அந்தக் காட்சி அழகாகப் படமாட்டிருக்கப்பட்டிருக்கும்.