சேர்கள், ஸ்டூல்கள் போன்ற ப்ளாஸ்டிக் ஃபர்னிச்சரில் நடுவில் ஏதோ ஒரு வடிவத்தில் ஒரு துளை இருப்பதைப் பார்த்திருப்போம். இந்த துளை எதற்காக இடப்பட்டிருக்கிறது என்று என்றாவது யோசித்திருப்போமா? ஆனால் அதன் பின்னணியில் உண்மையில் சில அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
பிளாஸ்டிக் ஸ்டூல்கள், சேர்களில் நடுவிலிருக்கும் சிறிய ஓட்டை பெரும்பாலானோரால் கவனிக்கப்படாத ஒன்று. இது எதற்கு என்று நாம் யோசித்து பார்த்திருக்க மாட்டோம். இதுபோன்றே, வேறு பல பொருள்களின் குறிப்பிட்ட வடிவத்தை கவனித்துள்ளீர்களா? இப்படியான வித்தியாசமான வடிவமைப்புகள் அழகிற்காகவா அல்லது வேறு ஏதேனும் பயன்பாட்டிற்காகவா? இப்படியாக இந்த பிளாஸ்டிக் ஸ்டூல்களின் உள்ள ஓட்டையின் பயன் தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படத்தான் செய்வீர்கள்.
ஸ்டூலில் இருக்கும் இந்த ஒட்டையின் பின் அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. பிளாஸ்டிக் பொருள்கள் செய்யும் பிராண்டட் அல்லது உள்ளூர் தொழிற்சாலைகள் இரண்டுமே உற்பத்திக்காக, அறிவியலின் பொதுவான விதிகளைப் பின்பற்றும். எனவே இந்தியாவிலோ அல்லது உலகின் எந்த மூலையிலோ இப்பிளாஸ்டிக் ஸ்டூள்கள் தயாரிக்கப்படுகிறது என்றாலும் அதன் தனித்துவமான வடிவமைப்பு பாதிக்கப்படாது.
1. ஸ்டூள்களில் நடுவிலுள்ள இந்த ஓட்டையானது அதனை உடையாமல் காக்கிறது. சதுரமாகவோ வேரு ஏதேனும் வடிவிலோ இந்த ஓட்டைகள் இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவென்று தெரியுமா? நாம் உட்காருகையில், ஸ்டூளின் கட்டமைப்பை பாதுகாத்து அது உடையாமல் காப்பதற்கு இந்த ஓட்டைகள் உதவும். மேலும் வட்ட வடிவிலான ஓட்டைகளானது அழுத்தத்தை சமமாகப் பரப்பும். துளைகள் சதுர வடிவிலோ அல்லது வேறெதேனும் வடிவிலோ இருந்தால்,
2. வீட்டிலோ கடைகளிலோ போதுமான இடமில்லாத சமயங்களில் இப்பிளாஸ்டிக் ஸ்டூள்களை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்திருப்போம். இந்த ஓட்டைகளானது இல்லையெனில் அடுக்கிவைத்த சேர்களை மீண்டும் பிடித்து எடுப்பது கடினமான செயலாக ஆகியிருக்கும் அல்லவா? இந்த ஓட்டைகள் இல்லையெனில், காற்று வெற்றிடம் உருவாகி பிடித்தெடுக்கும் பணி முடியாததொரு காரியமாகியிருக்கும்.
3. சேர்களின் நடுவே ஓட்டை இருக்க மூன்றாவது காரணம் அதை நாம் எளிதில் எடுத்துச்செல்வதற்கே. அந்த துளையின் நடுவே விரலைவிட்டு எளிதில் நாம் எடுத்துச் செல்வதுண்டு. ஆனால் அந்த துளையின் அளவு மிகவும் முக்கியமானது. ஓட்டை சற்று பெரிதானாலும் சேர் அல்லது ஸ்டூல் அதன் கட்டமைப்பு தன்மையை இழந்துவிடும்.
வாவ், இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?