சமூக வலைதளங்கள் மூலம் ஒருவர் தங்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்வது, ரசனையை வெளிப்படுத்துவது என்பது இன்றைக்கு பரவலாகிவிட்டது. அப்படி, 85 வயதான பெண் ஒருவர் தனக்குப் பிடித்த உணவு வகைகளை செய்யும் வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமல் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 


ரஸ்க் கேக்:


Vjay Nishchal (Instagram / dadikirasoi01) என்பவர் யூடியுபில் குக்கிங் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். டிஜிட்டல் உலகில் 85 வயது பாட்டியும் கன்டன்ட் க்ரியேட்டாராக தடம் பதித்து பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார். இவருக்கு யூடியூபில் 76 ஆயிரம் சப்ஸ்கிரைப்பர் இருக்கின்றனர். விஹய் நிஷ்சால் அவர் தந்தையிடமிருந்து சமையல் செய்ய கற்று கொண்டதாக சொல்கிறார். இரவது பேரனின் பரிந்துரைக்குப் பிறகு யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். சமீபத்தில் முட்டையில்லாமல் கேக் செய்து அப்லோட் செய்த வீடியோ வைரலானது. ரஸ்க் வைத்து பாட்டி கேக் செய்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 


“Eggless cake Ft. dadi Drake.” என்ற வீடியோ கடந்த மாதம் 17 ம் தேதி அப்லோட் செய்யப்பட்டது 1.1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 98 ஆயிரம் லைக்ஸ், ஏகப்பட்ட கமெண்ட்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. பலரும் ‘கூல் பாட்டி.’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ‘டான்சிங் dadi’ என்று இந்தியில் கமெண்ட் செய்துள்ளார். 






ரஸ்க் கேக்


என்னென்ன தேவை?


ரஸ்க் - ஒரு பாக்கெட் 


சர்க்கரை - 1/2 கப்


தயிர் - 1 கப்


பேக்கிங் சோடா - ஒரு சிட்டிகை


பேக்கிங் பவுடர் - ஒரு ஸ்பூன்


உப்பு - ஒரு சிட்டிகை


நெய் - ஒரு கப் 


பால் - ஒரு கப்


கோக்கோ பவுடர் - ஒரு கப் 


சாக்கோ சிப்ஸ் - ஒரு கப்


செய்முறை:


முதலில் ரஸ் துண்டுகளை நன்றாக மிக்ஸியைல் அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு, பால், தயிர், சர்க்கரை, நெய், கோக்கோ பவுடர், பேக்கிங் சோடா, பவுடர். உப்பு எல்லாவற்றையும் மிக்ஸி சாரில் சேர்த்து நன்றாக அரைத்து ரஸ்க் பவுடருடன் நன்றாக கலக்க வேண்டும். இதில் போர்ன்விட்டா, ஹாட்சாக்லேட் பவுடர், இல்லையெனில் டார்க் சாக்லேட் சேர்த்தும் செய்யலாம். அரைத்த கலவையை நெய் தடவிய பாத்திரம் ஒன்றிற்கு மாற்றவும். கூடவே சாக்கோ சிப்ஸ் சேர்க்க மறந்துடாதீங்க..


இதற்கு மைக்ரோவேவ் அவன் இருக்க வேண்டும் என்பதில்லை..அடுப்பில் அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து அதில் கொஞ்சம் த்ண்ணீர் சேர்த்து ஸ்டாண்ட் வைத்து 10 நிமிடங்கள் ப்ரீ-ஹீட் செய்ய வேண்டும். மூடி போட்ட பாத்திரம் என்றால் நல்லது. 10 நிமிடங்கள் ஆனதும், கேக் கலவை உள்ள பாத்திரத்தை உள்ளே வைத்து மூடிவிடவும். 45 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் கேக் ரெடியாகிவிடும். இதை குக்கரிலும் செய்து பார்க்கலாம். ருசியான ரஸ்க் கேக் ரெடி. சாக்லெட் சிரப் டிரிசில் செய்து சாப்பிடுங்க..