இன்றைய பிஸியான காலக்கட்டத்தில் பிரஷர் குக்கர் இல்லாத சமையலறையே இருக்க முடியாது. சமையல் நேரத்தை வெகுவாகக் குறைத்தாலும், சின்னக் கவனக்குறைவு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும். அவ்வப்போது குக்கர் வெடிக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்த ஆபத்தில்  இருந்து தப்பிக்க நாம் பின்பற்ற வேண்டிய 5 மிக முக்கியமான வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

Continues below advertisement

ரப்பர் கேஸ்கட் தரம்

குக்கர் மூடியில் உள்ள ரப்பர் கேஸ்கட் தளர்வாகவோ அல்லது விரிசல் விட்டிருந்தாலோ உடனடியாக அதை மாற்றிவிட வேண்டும். பழுதடைந்த கேஸ்கட்டைப் பயன்படுத்தினால் நீராவி பக்கவாட்டில் கசிந்து, உள்ளே சரியான அழுத்தம் உருவாகாமல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விடும். 

உணவு பொருட்களை முழுமையாக நிரப்ப கூடாது

 சாப்பாடு சீக்கிரம் வேக வேண்டும் என்பதால் குக்கரை முழுமையாக உணவு பொருட்களை நிரப்பிவிடக் கூடாது. குக்கரின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஒருபோதும் உணவை நிரப்பக் கூடாது. குறிப்பாக, பருப்பு மற்றும் அரிசி வேகும்போது பொங்கி வரும் என்பதால், அவற்றை பாதி அளவு மட்டுமே நிரப்புவது மிகவும் பாதுகாப்பானது.

Continues below advertisement

இதையும் படிங்க: Fridge: பிரிட்ஜ் ஃப்ரீசரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதா? முக்கிய காரணங்கள் இதோ!

வென்ட் பைப் தூய்மை

குக்கர் மூடியின் மேல் உள்ள வென்ட் பைப்பை (விசிலுக்கு அடியில் உள்ள துவாரம்) எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதில் உணவுத் துகள்கள் சிக்கிக்கொண்டால் நீராவி வெளியேற வழி இல்லாமல் அதிகம் அழுத்தம் ஏற்பட்டு குக்கர் வெடிக்கும் அபாயம் ஏற்படும்.

சரியான அளவு தண்ணீர்

குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றாமல் சமைப்பது மிகவும் ஆபத்தானது. தண்ணீர் இல்லாமல் போனால் குக்கரின் அடிப்பகுதி அதிக சூடாகி 'சேஃப்டி வால்வ்' வெடிக்கக் காரணமாகிவிடும். எனவே, சமைக்கும் பொருளுக்கு ஏற்ப சரியான அளவு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். 

இதையும் படிங்க: Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

அவசரமாக மூடியைத் திறக்காதீர்கள்

குக்கரில் சமையல் முடிந்தவுடன் பிரஷர் முழுவதுமாகக் குறையும் முன் மூடியை அவசரமாகத் திறக்கக் கூடாது. விசில் எடுத்த பிறகும் உள்ளே சிறிதளவு நீராவி இருக்கக்கூடும் என்பதால், அழுத்தம் முழுமையாகக் குறைந்ததை உறுதி செய்த பிறகே மூடியைத் திறக்க வேண்டும். அப்படி உடனே திறந்தால் வெடிக்கும் அபாயம் உள்ளது.