கொரோனா பெருந்தொற்றில் இருந்து தப்பிக்க ஊரடங்கு. வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருந்தும், நீண்ட நேரம் டிவி மொபைல் லேப்டாப் என மாறி மாறி பார்த்து 80 சதவீதமானவர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. கண் பார்வையில் பிரச்னை தொடங்கியது. இது முடிந்த வரை தடுக்க கூடியது தான் .ஆனாலும் நிறைய இளைஞர்கள், குழந்தைகள் கண் பார்வை கோளாறு பிரச்சினையினால் பாதிக்கபடுகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் இந்த சாதனங்கள் பயன்படுத்துவது நல்லது. ஆனால் , நீண்ட நேரம் பார்ப்பது உடலையும் பாதிக்க தொடங்கும். ஒட்டுமொத்தமாக இந்த கொரோனா காலத்தில் அனைவரும் மனஉளைச்சலை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். இது ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியாக அமைந்து விடுகிறது. இந்த கொரோனா காலத்திற்கு முன்பு கண்கள் நன்றாக இருந்ததாகவும், இப்போது இந்த கண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளதாகவும் கண்டறிந்து உள்ளனர்.
கண்களுக்கு பிரச்னை வருவதற்கான காரணங்கள் - நீண்ட நேரம் மொபைல் கேம் விளையாடுவது, சமூக வலைத்தளங்களை ஸ்க்ரோல் செய்வது, இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் மொபைல் பார்ப்பது, வீட்டில் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது குறிப்பாக நீண்ட நேரம் லேப்டாப் முன்னால் அமர்ந்து இருப்பது , இரவில் விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் மொபைல் பார்ப்பது. இப்படி பல்வேறு காரணிகளால் கண்களில் பிரச்னை வருகிறது.
அறிகுறிகள் என்ன - பொதுவான அறிகுறிகள் மங்கலான பார்வை, தலைவலி, வறண்ட, புண் மற்றும் கண்களில் நீர் வடிதல் ஆகியவை.ஒருவருக்கு பார்வை சரியாக இருந்தாலும் நீண்ட நேரம் திரையை பார்ப்பது கண்களுக்கு எரிச்சல், வலி ஆகியவற்றை உண்டு பண்ணும்
இதற்கு தீர்வு தான் என்ன?
மருத்துவர்கள் சில கண்ணாடி பரிந்துரை செய்கின்றனர். அதை திரையை பார்க்கும் நேரங்களில் பயன்படுத்தலாம்.
பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு தகுந்தாற் போல் கண்ணாடிகளை பரிந்துரை செய்வார்கள் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
தினம் DIGITAL DETOX செய்து கொள்வது நல்லது. அதாவது தினம் ஒரு குறிப்பிட்ட நேரம் எந்த திரையை பார்க்காமல், கண்களுக்கு ஓய்வு தருவது. தினம் ஒரு மணி நேரம் முதல் அவரவர் நேரத்திற்கு தகுந்தாற் போல் .இதை செய்யலாம்.
20:20:20 விதியை பின்பற்றலாம் 20 நிமிடம் திரையை பார்த்து கொண்டு இருந்தால் 20 வினாடிகள் 20 அடி தொலைவில் இருக்கும் பொருளை பார்ப்பது. இதை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்யலாம். இது கண்களுக்கு ஓய்வாக இருக்கும்