Diwali Decoration Ideas for Home: இன்னும் ஒருவாரம்தான்; தீபாவளி(Deepavali) வந்தாச்சு; புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பல்கார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க என்னல்லாம் செய்யலாம். என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம். ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருள்ட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம்.
மலர் அலங்காரம்:
மலர்கள் புத்துணர்ச்சியை தர வல்லது. ஓணம் விழாவின்போது அத்த பூ கோலம் போடுவது போல தீபாவளியன்று பூக்களை கொண்டு தோரணங்கள் செய்யலாம். மாலைகள் கடைகளிலேயே கிடைக்கும். அதை வாங்கி வீட்டின் நிலைகளை அலங்கரிக்கலாம். ஜன்னல் உள்ளிட்ட முக்கிய கதவுகளை பூக்களை கொண்டு அலங்கரிக்கலாம். மஞ்சள் சாமந்தி, வெள்ளை சாமந்தி, ரோஜா மலர்களை அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். வீட்டின் முக்கியமான பகுதிகளில் பூக்களை கொண்டு கோலம் வரையலாம். விளக்குகள் வைக்கும் இடங்களில் பூக்களால் அலங்கரியுங்கள். மழை நேரம் என்பதால் வீடுகளில் பூக்கள் வைத்து அலங்கரிப்பது நன்றாக இருக்கும்.
வண்ண விளக்குகள்:
தீபங்களால் ஒளிரும் நாள் தீபாவளி; தீபாவளி அன்று மாலை விளக்குகளால் வீட்டை அலங்கரித்தால் ரம்மியமாக இருக்கும். உறவுகள் சூழ தீபத்துடன் கதைப் பேசி கொண்டாடலாம். மண் விளக்குகள், எலக்ர்டிக் வண்ண மின் விளக்குகள் என எதுவானும் உங்க சாய்ஸ்.
வண்ண மெழுகுவர்த்திகள்:
இரவு நேரங்களில் குடும்பத்துடன் உணவருந்தும்போது, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். தண்ணீருக்குள் மிதக்கும் மெழுகுவர்த்திகளை வாங்கலாம். கண்ணாடி பாட்டில்கள், கண்ணாடி குடுவை அல்லது டம்ளரில் தண்ணீர் நிரப்பில் அதில் மிதக்கும் மெழுகுவர்த்திகளை எரியவிடலாம். பார்க்க அழகாக இருக்கும். இதிலும் வாசனை பரப்பும் மெழுகுவர்த்தியும் இருக்கிறது. அதையும் பயன்படுத்தலாம். நறுமணத்துடன் ஒளிரும் விளக்குகள் சூழலை அழகானதாய் மாற்றிடும். அதோடு மெழுகுவத்தி Fragrance oils burner கடைகளில் கிடைக்கும். லேவண்டர், மல்லிகை, லெமன்கிராஸ் உள்ளிட்ட எண்ணெய் அறையை நல்ல நறுமனத்துடன் வைக்க உதவும். அவற்றை வாங்கியும் பயன்படுத்தலாம். விழாக்காலங்கள் மட்டுமல்லமால மற்ற நேரங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
காகித விளக்குகள்:
கடைகளில் கிடைக்கும் காகித அலங்கார விளக்குகளை வாங்கி உங்கள் வீடுகளை அலங்கரிக்கலாம்.
தீபாவளி அன்றைக்கு முந்தைய நாளே வீட்டை அலங்கரித்து வைப்பது நல்லது. மலர் அலங்காரம் இல்லாமல் மற்ற தோரணங்கள், வண்ண பெயிண்ட்களால் கோலம் வரைதல் உள்ளிட்டவற்றை முந்தைய நாளே செய்துவிடலாம்.
தீபாவளி நேரம் என்பதால், வீட்டில் நிறைய வேலைகள் இருக்கும். எல்லா வேலைகளையும் ஒரே நாளில் செய்யாமல், திட்டமிட்டு செய்வது வேலை பளூவை குறைக்க வழி.
தீபாவளியன்றைக்கான அலங்காரங்கள், உணவு தயாரிப்பு உள்ளிட்டவைகள் பெண்களுக்கான வேலை என்று ஆண்கள் ஒதுங்கி கொள்ளாமல், பண்டிகை கால வேலைகளில் தங்களை ஈடுபடுத்து கொள்வது முக்கியமானது. மகிழ்ச்சியாக குடும்பத்துடன் விடுமுறை நாளை கொண்டாடலாம். பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து கும்பம், நண்பர்கள் தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்!
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.