தீபாவளிக்கு ஒவ்வொரு வீடுகளும் பளபளவென ஜொலிக்கும் எனலாம். அந்த அளவுக்கு அந்த நாளில் வீடு அலங்காரம் செய்து காணப்படும்.


எல்.இ.டி விளக்குகளால் ஜொலிக்க விடலாம்:


 தீபாவளிக்கு வீட்டு அலங்காரத்தில் மிக முக்கியமான விஷயம் எலக்ட்ரிக் விளக்குகள். இந்த ஆடம்பரமான திரைச்சீலை விளக்குகள் அந்த நாளுக்கு அழகு சேர்க்க பல வண்ணங்களில் வருகின்றன. இது ரிமோட்டுடன் வருகிறது, எனவே நீங்கள் அதை எளிதாகக் கட்டுப்படுத்தலாம். வேவி, சீக்வென்ஷியல், ஸ்லோ-க்ளோ, சேஸிங்/ஃப்ளாஷ், ஸ்லோ ஃபேட், ட்விங்கிள்/ஃபிளாஷ் மற்றும் ஸ்டெடி ஆன் என 8 லைட்டிங் முறைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இது வாட்டர் ப்ரூஃப் டிசைனுடன் வருவதால், உள்ளேயும் வெளியேயும் மழைக்காலத்திலும் கூடப் பயன்படுத்தலாம். இந்த எல்இடி விளக்குகள் உயர் தரத்துடன் வருகின்றன, மேலும் அதிக வெப்பம் அல்லது வெடித்துவிடும் என்கிற ஆபத்து இல்லை.




அலங்காரக் கிண்ணங்கள்:


உங்கள் வீட்டை ஓளிவிளக்குகளால் அலங்கரிக்கும்போது அதன் நுழைவாயில் அல்லது பூஜை அறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த தியா வடிவ அலங்கார கிண்ணம் பூஜை அறை அல்லது நுழைவாயிலில் வைக்க சிறந்த தேர்வாக இருக்கும். கிண்ணத்தை தண்ணீரில் நிரப்பி, பூக்கள் அல்லது மிதக்கும் மெழுகுவர்த்திகளைச் சேர்த்து, தீபத்தை ஒளிரச் செய்யுங்கள். தீபாவளிக்கான சிறந்த அலங்காரத்தை இது உங்களுக்கு உறுதியளிக்கிறது. 


ரங்கோலி ஹோல்டர்கள்:


வண்ணமயமான ரங்கோலி வரையாமல் தீபாவளி முழுமையடையாது. இந்த டீலைட் ஹோல்டர்களை ஒளிரச் செய்து, அவற்றை உங்கள் ரங்கோலிக்கு இடையில் வைக்கவும், அவற்றை மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் மாற்றவும் இது உதவுகிறது. இதன் பரிமாணம் 10L x 10W x 10H சென்டிமீட்டர்கள். இந்த அழகான ஹோல்டர் பல வண்ண மற்றும் மலர் வடிவமைப்புடன் வருகிறது. 


தோரணங்கள்:


தீபாவளி என்பது வீட்டு வாயிலில் தொங்கிக்கொண்டிருக்கும் பழைய மாடல் தோரணங்களைப்  புதியதாக மாற்றும் நேரம். தீபாவளி வீட்டு அலங்காரத்தில் செயற்கை சாமந்தி பூ தோரணங்கள் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இது உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரத்திற்கு ஏற்றது மற்றும் வீடு மற்றும் அலுவலகம் இரண்டிலும் பயன்படுத்தப்படலாம். 


ரங்கோலி டூல் கிட:


ரங்கோலியை எளிதாகவும் சரியானதாகவும் வரைய, மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில், எல்லோராலும் உபயோகிக்கக் கூடிய வகையிலான இந்த டூல் கிட்டை வாங்கவும். இந்த டூல் கிட்டில் மூன்று டிசைன்கள் உள்ளன. கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்க பிரகாசமான மற்றும் துடிப்பான வண்ணங்களைச் சேர்க்கவும்.எனக்கு கோலம் போடத் தெரியாது எனத் தப்பிக்கும் வீட்டு ஆண்களுக்கு எளிதில் கோலம் போட இந்த டூல் கிட் உதவியாக இருக்கும்.