காலை தூங்கி கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்க செல்லும் போது கடைசியாக பார்க்கும் ஒன்று மொபைல் போன் தான். கிட்டத்தட்ட அதற்கு அடிமையாக இருக்கிறோம் என்று சொல்லலாம். இதில் பல்வேறு பயன்கள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது உடலுக்கு பல்வேறு நோய்கள் வருகிறது. அதை பற்றி தெரிந்து கொள்வோம்.


கண்கள் - கண்களில் இருக்கும் செல்களை பாதிக்கிறது. கண்களில் இருக்கும் நீர் சத்து குறைகிறது. இது கண்களில் வலி, எரிச்சல் , அழுத்தம் போன்ற பிரச்சனை ஏற்படுத்தும். கண்கள் பார்வை குறைபாடு வரும். கண்ணாடி அணியும் நிலை ஏற்படலாம். அவ்வப்போது கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதனால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள உதவியாக இருக்கும்.




மணிக்கட்டு பிரச்சனை - மணி கட்டு வலி, வீக்கம், அசைக்க முடியாமல் வலி போன்ற பிரச்சனைகள் வரும். இளம் வயதினரிடையே வளர்ந்து வரும் ஒரு பிரச்சனையாக இது இருக்கிறது. ஒரு நாளைக்கு 5-6 மணி நேரத்திற்கு கூடுதலாக மொபைல் போன் கையில் வைத்து பயன்படுத்தினால் இது போன்ற பிரசச்னைகள் வரும்.


தோல் பிரச்சனை - மொபைல் போன் அதிக அளவு பாக்டீரியா தொற்றுகள் பரவுவதரு வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இந்த தொற்று சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.அளவுக்கு அதிகமாக செல் போன் பயன்படுத்தினால் சருமம் சீக்கிரம் வயதான தோற்றத்தில் இருக்கும்.  மேலும் சருமத்தில் எரிச்சல் அரிப்பு, சிறு கட்டிகள் போன்றவை வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.




தூக்கமின்மை - தூக்கம் வரவில்லை என மொபைல் போன் பயன்படுத்த ஆரமிக்க தொடங்கி விட்டனர். இதனால் தூக்கமின்மை பிரச்சனைகள் வரும். நீண்ட நேரம் போன் பார்த்து கொண்டே இருந்து விட்டு தூக்கம் வராது. மொபைல் போனில் இருந்து வரும் ஒளிச்சம் மூளையை விழித்து இருப்பதற்கான சிக்னல் அனுப்பும். அதனால் மூளையும் தூங்குவதற்கான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாமல், விழித்து இருக்கும். இது நாளடைவில் தூக்கமின்மை பிரச்சனையை தரும்.


மொபைல் போன் குறைத்து பயன்படுத்துவதற்கு சில ஆலோசனைகள்




காலையில் எழுந்ததும் போன் எடுக்காமல், தூங்கி எழுந்ததும் அடுத்து வேலைகளை செய்வதற்கு மனதை தயார்படுத்துங்கள்.


தூங்க செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரம் முன்னதாக போனை எடுக்காதீர்கள்.


வாரம் ஒரு நாள் செல் போன் இல்லாமல் குடும்பத்துடன் நேரத்தை செலவழியுங்கள். ஒரு நாள் சமூக வலைத்தளங்களில் இருந்து விடுப்பு எடுத்து கொள்ளுங்கள். தேவைக்கு மட்டும் செல் போன் பயன்படுத்துங்கள். 


ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டும் போன் பயன்படுத்த வேண்டும் என மொபைல் போனில் டைமர் செட் செய்து வைத்து கொள்ளுங்கள். இது அன்றாடம் போன் பயன்பட்டை குறைக்கும்.


இது போன்ற விஷயங்களை தினம் செய்யும் போது பெரிய அளவில் மாற்றமாக இருக்கும்.