கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் ஏற்படும் பாதிப்புகள் அதன் இயக்கத்தையே நிறுத்தக்கூடியது. அதிகளவில் மது அருந்துவது, உடல் பருமன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஆகியோருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கம், அதிக நேரம் உட்காந்தே இருப்படியான பணி சூழல், அதிக நச்சுத்தன்மை கொண்டா பாக்கெட், துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.


உடல் உறுப்புகளிலேயே கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள்,  கழிவுகள் ஆகிவயற்றை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.


கல்லீரலில் கொழுப்பு அதிகரிப்பதால் பல்வேறு பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். கல்லீரலில் பாதிப்பு எற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவுமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். சரிவிகித உணவு, உடற்பயிற்சி பல்வேறு ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க உதவலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தலாம். 



  • கல்லீரலில் கொஞ்சம் கொழுப்பு சேர்வதுபோல இருந்தாலும் அதை மாற்றுவதற்கு முதலில் லைஃப்ஸ்டைல் மாற்ற வேண்டும். வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்ப்பது, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உடல் எடையை நிர்வகிப்பது, மது அருந்துவதை தவிர்ப்பது அல்லது அளவோடு அருந்துவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.

  • பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். 

  • நல்ல கொழுப்புள்ள உணவுகள் உள்ளிட்டவற்றை டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். 

  • வால்நட், அவகேடோ, ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது. 

  • போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. 

  • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.

  • கல்லீரல் ஆரோக்கியத்திற்கு புதினா, லெமன்க்ராஸ், இஞ்சி ஆகிய மூன்று எவ்வளவு நல்லது என ஊட்டச்சத்து நிபுணர் சிம்ராட் கத்துரியா சொல்லும் அறிவுரைகளை காணலாம்.

  • புதினாவில் உள்ள மெத்தனால் கல்லீரலில் கொழுப்பு சேராமால் பாதுகாக்கிறது. அதோடு, செரிமான மணடலத்தையும் சீராக இயக்க வைக்கும்.

  • லெமன் க்ராஸ் சிட்ரல் அதிகமுள்ளது. இது கல்லீரல் இன்ஃப்ளமேசன் உள்ளிட்டவைகளில் இருந்து பாதுகாக்கிறது.

  • இஞ்சியில் அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன் நிறைந்துள்ளது.


எனர்ஜி டிரிங்:


புதினா, லெமன் க்ராஸ், இஞ்சி மூன்றையும் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை இல்லாமல் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக, இந்த நீரை குடிப்பதன் மூலமாக கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். ஏற்கனவே கல்லீரல் பாதிப்பிற்கு மருத்து எடுத்துவருபவர்கள் அதையும் சேர்த்து சாப்பிட வேண்டும். தீவிர பாதிப்பிற்கு மருத்துவர் அறிவுறுத்தும் சிகிச்சை முறையை மட்டுமே பின்பற்ற வேண்டும்.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.