Just In





Nail Polish | ஆபத்தில் முடியும் அழகு - நெயில் பாலிஷ் பயன்படுத்துபவரா நீங்கள்.. எச்சரிக்கை!
இயற்கை அழகு எல்லாம் அழகும், ஆரோக்கியமும் சேர்ந்து இருக்கும். செயற்கை அழகு எல்லாம் தற்காலிகமாக அழகாக இருந்தாலும், நாளடைவில் ஆரோக்கியமின்மை ஆக இருக்கும்.

இயற்கை அழகு எல்லாம் அழகும், ஆரோக்கியமும் சேர்ந்து இருக்கும். செயற்கை அழகு எல்லாம் தற்காலிகமாக அழகாக இருந்தாலும், நாளடைவில் ஆரோக்கியமின்மை ஆக இருக்கும். அழகு அனைத்து நேரங்களிலும் ஆபத்தாக இருப்பதில்லை. நெயில் பாலிஷ் அடிக்கடி பயன்படுத்துவதால் இது சரும பிரச்சனைகளை தருகிறது.
தன்னை அழகுப்படுத்தி கொள்ள ஒவ்வொரு பெண்ணும் தனியாக நேரத்தை ஒதுக்கி செலவு செய்து அழகு சாதன பொருள்கள் வாங்குகிறார்கள். செயற்கையாக தயாரிக்க படும் ஒவ்வொரு பொருளிலும், நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கும், அனைவரையும் கவரும் வாசனை உடனும், பளபளப்பாக இருப்பதற்கும் ஏற்றவாறு வேதியியல் பொருள்கள் சேர்க்கப் படுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தும் பல்வேறு பிரச்சனைகளை தருகிறது. ஒவ்வாமை பிரச்சனையில் ஆரம்பித்து புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கால் மற்றும் கை விரல் நகங்களை அழகு படுத்த பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷ் நகங்கள் வழியே ஊடுருவி நரம்பு மண்டலம் வரை பாதிப்பை ஏற்படுத்திகிறது. பார்மாலிடிகைடு, டிபூட்டல் பத்தாலேட், டோலுன் ஆகிய வேதியல் கலப்பு அதில் சேர்க்க படுகிறது. இது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது. இது ஒவ்வொன்றும், மென்மை தன்மைக்கும், பொலிவுக்காகவும், பயன்படுத்த படுகிறது. இது அடிக்கடி பயன்படுத்தும் போது தலைவலி, மயக்கம், தலைச்சுற்று, குமட்டல், உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளை தருகிறது.
ஏற்கனவே சரும ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு பார்மாலிடிகைடு கலந்த நெயில் பாலிஷ் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேலும் இது பல்வேறு தோல் நோய்கள், மனஅழுத்தம்,இதய நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தும். டிபூட்டல் பத்தாலேட் எனும் ரசாயனம் சேர்ப்பதால், நெயில் பாலிஷ் நீண்ட நாட்களுக்கு பொலிவாக இருக்கும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், சுவாச கோளாறுகள், நாளமில்லா சுரப்பிகள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
இந்த நெயில் பாலிஷ் நீண்ட நாட்களுக்கு நகத்தில் இருப்பதற்கு, 2-3 முறை கோட்டிங் கொடுக்க படுகிறது. இது நகத்தில் இருந்து கொண்டே இருக்கும். எந்த ஒரு பிரச்சனையும் ஒரே நாளில் வந்து விடாது. நாளடைவில் பெரிய பிரச்சனையாக மாறும்.
இது போன்று பிரச்சனைகள் வராமல் தடுக்க வழிமுறைகள் என்ன ?
ஏதேனும் விசேஷ நாட்களில் மட்டும் நெயில் பாலிஷ் போட்டு, இரவு அதை சுத்தமாக நீக்கி விட்டு கைகளை சோப்பு போட்டு கழுவி விடுவது நல்லது. உடை நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு கலர் ஆக வாங்காமல், பொதுவான ஒரு நிறத்தை வாங்கி பயன்படுத்தலாம். நெயில் பாலிஷ் வாங்கும் போது அதில் கலந்து இருக்கும், ‘5 பிரீ நெயில் பாலிஷ், 3 பிரீ நெயில் பாலிஷ்’ ரசாயன கலப்பு பற்றி தெரிந்து வாங்கி கொள்ளுங்கள். சில நெயில் பாலிஷ் குறைவான ரசாயனம் கலந்து இருக்கும்.