கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. ஓமிக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 128க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பரவிவிட்டது.


இதனால் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக் கூட கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நாம் அனைவரும் நம் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க வேண்டியுள்ளது. யோகா, பிரணாயமா மட்டும் போதாது, குறிப்பிடச் சில உணவு வகைகளையும் உட்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார் ருஜுதா திவேகர்.


ருஜுதா திவேகர் மிகவும் பிரபலமான டயட்டீசியன். இவர் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் இன்னும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு டயட்டீசியன். ஏன் அனில் அம்பானிக்கும் கூட இவர் தான் டயட்டீசியன்.


அப்படிப்பட்டவர் கொரோனா காலத்தில் நமது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சில பல டிப்ஸ்களை நமக்காக இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


அந்தப் பழம் வேறேதும் இல்லை.. இலந்தைப்பழம். ஆங்கிலத்தில் பெர் அல்லது ஜுஜுப் என அழைக்கப்படுகிறது. இனிப்பும் புளிப்புமாக இருக்கும் இந்தப் பழத்தில் வைட்டமின் சி அதிகமாக நிறைவாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மலச்சிக்கலைத் தீர்க்கிறது, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையை குணப்படுத்துகிறது. இன்னும் பல நோய்களுக்கும் இது அருமருந்து எனக் கூறுகிறார் ருஜுதா.


இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ருஜுதா திவேகர், நீங்கள் இந்த சீசனில் இலந்தைப்பழம் சாப்பிடுகிறீர்களா? தவறாமல் சாப்பிடுங்கள். அதில் வைட்டமின் சி அதிகம். ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதவைவிட இந்த சிறிய பழத்தில் அதிக வைட்டமின் உள்ளது. அடிக்கடி நோய்வாய்ப்படும் நோஞ்சான் குழந்தைகளுக்கு இது நல்லது. #Indiansuperfoods #seasonal என்று பதிவிட்டுள்ளார்.





இலந்தைப்பழத்தில் வைட்டமின் ஏ, சி நிறைவாக இருக்கிறது. இத்துடன் பொட்டாசியம், இரும்புச் சத்து, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. அதுவர அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் 24ல் 18 வகையான அமினோ அமிலக் கூறுகள் இந்தப் பழத்தில் உள்ளன.


இதில் கலோரி மிகமிகக் குறைவு. அதனால் இதனை இடைப்பட்ட நேர ஸ்நாக்காக உண்ணலாம். இதில் நார்ச்சத்து அதிகம். உடல் எடையைக் குறைக்க இது உதவும்.