’சின்ன தப்புனால பெரிசா என்னங்க ஆகிடப்போகுது?’ என்னும் அலட்சியம் நம்மில் பலருக்கும் உண்டு. இந்த அலட்சியம் எதில் இருந்தாலும் செக்ஸில் இருக்கக் கூடாது என்கிறார் பாலியல் நிபுணர். காண்டம் உபயோகிப்பது தொடங்கி லூப் உபயோகிப்பது வரை செக்ஸில் நாம் கவனிக்கத் தவறும் சின்னச் சின்ன விஷயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
காண்டம் வாங்கியதும் பர்ஸில் வைக்கலாமா?
பொதுவாக மெடிக்கல் ஷாப்களில் காண்டம் வாங்குபவர்கள் உடனடியாக அதனை பர்ஸில் வைப்பார்கள். ஆனால் அதனை பர்ஸில் வைப்பது தவறு. பர்ஸின் மடிப்புகளில் சிக்குவதால் ஆணுறை உடைவதற்கோ அல்லது நைந்து போவதற்கோ வாய்ப்பு அதிகம்.
நகங்களை வெட்டாமல் இருப்பது
செக்ஸில் கைகளை அல்லது விரல்களை அதிகம் உபயோகப்படுத்துபவர்கள் நகங்களை அடிக்கடி திருத்திக் கொள்ளப்பழக வேண்டும். அதனால் பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.
செக்ஸுக்குப் பிறகு ஆணுறையைக் கழற்றாமல் இருப்பது
செக்ஸ் முடிந்த பிறகு இருவருமே அயர்ச்சியில் கட்டியணைத்து உறங்கத் தோன்றும். ஆனால் அந்த அயர்ச்சியில் சிலர் ஆணுறையைக் கழற்ற மறந்துவிடுவார்கள். ஆணுறையை அணிந்தபடியே உறங்குவது ஆணுறுப்புக்கு நல்லதல்ல. மேலும் ஆணுறையை அணிந்தபடியே உறங்குவதால் அதில் இருக்கும் விந்தணு கசிந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.அதனால் ஆணுறை அணிந்ததே பயன் இல்லாமல் போய்விடும்.
சுத்தமாக இருப்பது
எப்போதும் செக்ஸுக்கு முன்பு குளிப்பது அல்லது குறைந்தபட்சம் அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது.இதனால் தொற்று உள்ளிட்ட பாதிப்பகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்
சிறுநீர் கழிப்பது
செக்ஸ் முடிந்ததும் சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று செக்ஸின் மூலம் ஒருவருக்கு ஒருவர் தொற்றிய பாக்டீரியா உள்ளிட்டவை வெளியேற வாய்ப்புகள் அதிகம்.
ஆணுறையை சரிவர அணிவது
சிலர் ஆணுறையை முழுவதுமாக ஏற்றி அணிவார்கள். ஆனால் அவ்வாறு அணியக் கூடாது என்கிறார் நிபுணர். நுணியில் சிறிது இடைவெளி விட்டு ஆணுறையை அணிவது எப்போதும் நல்லது என்கிறார். இதனால் விந்தணு வெளியேறும்போது அது நிரம்புவதற்குச் சிறிது இடம் இருக்கும். இடம் இல்லாமல் போகும்போது சில ஆணுறைகள் கிழிந்து அவை வெளியேற வாய்ப்புள்ளது.
ஒரே மாதிரியான செக்ஸ்
உடலுறவின்போது ஒரே மாதிரியான செக்ஸில் ஈடுபடுவது இருவருக்குமே போரடித்துவிடும்.அதனால் செக்ஸில் எப்போதுமே புதுமையும் சுவாரசியமும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சரியான லூப்ரிகண்ட்களை தேர்ந்தெடுப்பது
உங்களது உறுப்புக்குச் சரியான ஏதுவான லூப்ரிகண்ட்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தவேண்டும். பெரும்பாலும் பலருக்கு நீரால் ஆன லூப்ரிகண்ட்கள் தோதாக இருக்கும். சிலருக்கு ஜெல் லூப்ரிகண்ட்கள் சரியானதாக இருக்கும். ஆனால் எது தனக்குச் சரி என்று மருந்தகத்திலோ அல்லது மருத்துவரிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு பிறகு அதனை உபயோகிப்பது நல்லது.