கிறிஸ்துமஸ் வந்தாச்சு..இந்த வார இறுதி கொண்டாட்டம் களைகட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக காத்திருப்பார்கள். பரிசுகள், கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் கேக், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட்டம் என்று பண்டிகை காலம் மகிழ்ச்சியாக இருக்கும். பரிசுகள் எல்லாருக்கும் ஆச்சரியத்தை தரக் கூடியதுதான். நமக்காக பரிசுப் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்ற ஆர்வத்தினை போல, கிறிஸ்துமஸ், புத்தாண்டு இம்முறை என்னெவெல்லாம் ஒளித்து வைத்திருக்கிறது என்று ஆவல் அதிகமாக இருக்கும். பொதுவெளியில் பிரம்மாணட கொண்டாட்டங்கள் என்பதை போலவே வீட்டிலேயே நமக்கு புடித்த வகையில் கொண்டாடலாம். குடும்பத்தினருடன் கோலகமாக கிறிஸ்துமஸ் ஈவ், கிறிஸ்துமஸ் கொண்டாட உங்களுக்காக சில ஐடியா இதோ.





மூவி மாரத்தான் :


குளூ குளூ  டிசம்பர்.. கிறிஸ்துமஸ் ஈட், அலங்கரிக்கப்பட்ட வீட்டில் குடும்பத்தினருடன் பிடித்த திரைப்படங்களை காணலாம். ஃபீல் குட் கிறிஸ்துமஸ் திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. விடுமுறை தினம் என்றால் நாள் முழுக்க சிறந்த திரைப்படங்களை கண்டு மகிழலாம். பாப்கார்ன், வகை வகையான உணவுகளுடன் நல்ல மூவி டைம்-ஆக இருக்கும்.





விளையாடி மகிழுங்கள்: 


பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலாகிவிட்டது. விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் செலவிடலாம். கிறிஸ்துமஸ் நேரத்தில் குழந்தைகளுடன் சேர்ந்து அலங்காரம் செய்யலாம். கிறிஸ்துமஸ் தீம்களுடன் நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன. புதிர் விளையாட்டு, போர்டு கேம்ஸ் என்று குழந்தைகளுடன் விளையாடி மகிழலாம். குடும்பத்தினருடன் கதைப் பேசி மகிழச்சியாக அன்றைய தினத்தை கொண்டாடலாம். 


பேக்கிங்:


கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் எப்படி, கேக், இனிப்புகள், குக்கீஸ் இல்லாமல் எப்படி? குழந்தைகளுடன் பேக்கிங் செய்யலாம். சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிஸ்கெட்கள் செய்து ருசித்து உண்ணலாம். நண்பர்கள், அண்டை வீட்டாருக்கும் வழங்கலாம். குழந்தைகளும் ஆர்வமுடன் கேக், பிஸ்கெட்களை தயாரிப்பார்கள். 






சீக்ரெட் சாண்டா பரிசுகள்:


கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிவற்றை கொண்டாட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு பரிசுகளை வழங்கலாம். உங்கள் அன்பிற்குரியர் நீண்ட நாட்களாக எதாவது வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பதை அவர்களுக்கு அளித்து சர்ப்ரைஸ் செய்யலாம்.


குடும்பத்தினர் நண்பர்களுடன் டீ பார்ட்டி:


விழா காலங்களில் உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வருகை தருவதை விட வேறென்ன கொண்டாட்டம் இருக்க முடியும். அவர்களை வீட்டிலேயே தங்கிடும் வைத்து பல்வேறு கொண்டாட்டங்களை திட்டமிட்டு செய்யலாம். டீ பார்ட்டி, அனைவரும் சேர்ந்து எதாவது சிறப்பான உணவுகளை சமைத்து உண்ணலாம்.


கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்:



  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நல்லெண்ணத்துடன் ஆசீர்வதிப்பாராக.

  • ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.

  • கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது.  நீங்கள்  இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ்  வாழ்த்துகள்.

  •  கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 




இதையும் படிங்க..


Christmas Cake: கேக் இல்லாத கிறிஸ்துமஸா? எளிமையாக குக்கரில் செய்யக்கூடிய கேக் ரெசிப்பி இதோ..