Childhood Obesity: குழந்தைகள் பருமனாகும் பிரச்னை.. கவலையில் பெற்றோர் - காரணமும், தடுக்கும் வழிகளும்..
Childhood Obesity: குழந்தைகள் பருமானாகாமல் தடுக்க முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Childhood Obesity: குழந்தைகள் பருமானாவதற்கான முக்கிய காரணங்கள்? கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
குழந்தைகள் பருமனாகும் பிரச்னை:
அண்மை காலங்களில் குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக உடல் பருமன் உருவெடுத்துள்ளது. இதனை இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக நிபுணர்கள் கருதுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக, குழந்தை பருவத்திலிருந்தே அதிகப்படியானோர் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். ஜங்க் ஃபுட்ஸ், சர்க்கரை பானங்கள் மற்றும் ஸ்க்ரீன் டைம் ஆகியவை வாழ்க்கை முறையைப் பாதிக்கிறது. இதுவும் உடல் பருமன் பிரச்னைக்கு ஒரு காரணம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பெற்றோரின் கடமை
குழந்தைகளிடம் உள்ள ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை சரியான நேரத்தில் கண்டறியப்படாவிட்டால், முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், அவை உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கக் கூடுமாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழங்குவது மிகவும் முக்கியம். இதன் ஒரு பகுதியாக, குழந்தைகளின் வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மிகப்பெரிய மாற்றங்களாக மருத்துவர்கள் சில பரிந்துரைகளை வழங்குகின்றனர். அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பார்ப்போம்.
உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்
குழந்தைகளுக்கு சிறந்த, ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்குவது மிகவும் நல்லது. ஆன்லைனில் காணப்படும் அதிக கலோரி உணவுகளை முடிந்தவரை ஒதுக்கி வைக்க வேண்டும். ஜங்க் ஃபுட்டை முழுமையாகக் குறைக்க வேண்டும். அதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை அவர்களுக்கு நடைமுறையில் காட்டி பள்ளிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும். உணவு விஷயத்தில் கல்வி பெற்றோரிடமிருந்து மட்டும் வருவதில்லை.. ஆசிரியர்களிடமிருந்தும் வரும்போதுதான் நல்ல பலன்களைக் காண முடியும். வீட்டை விட்டு வெளியே இருக்கும்போது கூட, எந்த வகையான ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும்.
உடல் செயல்பாடுகளை அதிகரித்தல்
பள்ளிக் குழந்தைகள் தினமும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் முக்கியம். ஏனெனில் பள்ளியில் நீண்ட நேரம் உட்கார்ந்து பயிற்சி எடுப்பது, இரவு நேரப் பயிற்சி எடுப்பது அல்லது தூங்குவது போன்றவற்றால் அவர்களுக்கு அதிக உடல் செயல்பாடுகள் கிடைப்பதில்லை. இது அவர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, குழந்தைகள் ஒரு நாளைக்கு 30 நிமிட உடல் செயல்பாடுகளை (உடற்பயிறி, விளையாட்டு) உறுதி செய்ய வேண்டும். இதற்காக, பள்ளிக்குப் பிறகு காலையிலும் மாலையிலும் குழந்தைகளுடன் விளையாட வேண்டும். பள்ளிகளில் விளையாட்டு காலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விளையாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட காலத்தை ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை முடிக்க பயன்படுத்த கூடாடு. உடற்கல்வியை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். இது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். பள்ளி இல்லாதபோது, வெளிப்புற விளையாட்டுகள், யோகா மற்றும் நடனம் செய்யலாம். இவை குழந்தைகளில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.
ஆபத்தான மன அழுத்தம்
குழந்தைகளில் உடல் பருமனைத் தடுக்க, அவர்களை மன அழுத்தமின்றி வைத்திருக்க வேண்டும் (Stress-Free Parenting Tips). அவர்கள் ஏதேனும் காரணத்தால் மன அழுத்தத்தில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அவர்களிடம் கேட்டு பிரச்சனையைக் கண்டறிய வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைப் படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது. குழந்தைகள் கற்றுக்கொள்ள உதவும் எளிய நுட்பங்களையும் சுவாரஸ்யமான தலைப்புகளையும் அவர்களுக்கு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை வழங்க முடிந்தால், அவர்கள் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க முடியும். குழந்தைகள் வீட்டிலிருந்து மட்டுமல்ல, பள்ளியிலிருந்தும் உதவி பெற்றால், ஆரம்ப கட்டத்திலேயே அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை உருவாகும்.
(குறிப்பு: பல்வேறு ஆய்வுகள், ஆராய்ச்சி மற்றும் சுகாதார இதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் வழக்கம் போல் உங்கள் புரிதலுக்காக இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல் மருத்துவம் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. உடல்நலம் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். )
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















