சப்பாத்தி, தோசை போன்றவற்றிற்கு நாம் ரெகுலராக சமைக்கும் தக்காளி சட்னி, குருமா போன்ற சைடிஷ் வகைகள் போரடித்துவிட்டதா? அப்போ நீங்க குடைமிளகாயை வைத்து கீழே குறிப்பிட்டுள்ள சைட் டிஷ்ஷை முயற்சி செய்யலாம். குடைமிளகாயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமுள்ளது. மேலும் வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும். இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. குடைமிளகாயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. வாங்க குடைமிளகாய் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்


குடைமிளகாய் - 1 (நறுக்கியது), வெங்காயம் - 1 1/2 கப் (நறுக்கியது) , பச்சை மிளகாய் - 3 (நீளவாக்கில் கீறியது) , இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன் ,  சீரகம் - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,  காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லித் தூள் - 2 டீஸ்பூன்,  உப்பு - சுவைக்கேற்ப , எண்ணெய் - 1/4 கப் , கொத்தமல்லி - சிறிது அரைப்பதற்கு, தக்காளி - 3 (நறுக்கியது) , முந்திரி - 6 , பட்டை - 1/4 இன்ச்.

செய்முறை 


முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, முந்திரி, பட்டை, கிராம்பு ஆகியவற்றைப் போட்டு, நன்கு மைய அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 


பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.


பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் சேர்த்து,  3 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவேண்டும்.   மஞ்சள் தூள், இதனுடன் மல்லித் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் வதக்கி விட வேண்டும்.


மசாலா நன்கு வதங்கியதும், அரைத்த தக்காளி விழுதை ஊற்றி, சிறிது நீரை சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். 


பின் குடைமிளகாயை சேர்த்து கிளறி 3 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குடைமிளகாய் மசாலா தயார். இதை சூடான சப்பாத்தி, தோசை மற்றும் இட்லியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும். 


மேலும் படிக்க,


CM Stalin Speech: போதைப் பழக்கம் கொடிய நோய்.. தனிமனிதருக்கு மட்டுமல்ல.. மொத்த மாநில வளர்ச்சிக்கும்.. முதலமைச்சர் ஸ்டாலின் உரை..


Bhartiya Bill Replaces India : ’பாரதிய’ என மாற்றப்படும் இந்திய சட்டங்கள்.. மசோதாக்களை தாக்கல் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா