சுய இன்பம் சரியா, தவறா என்ற குழப்பமா? டாக்டர் சொல்வதைக் கேளுங்கள்.


சுயஇன்பம் பற்றி பெரும்பாலானோர் வெளிப்படையாக பேசத் தயங்குவார்கள். நமக்கு நாமே உணர்வு கிளர்ச்சியை ஏற்படுத்தி சுகம் காண்பது தான் சுய இன்பம்.  ஆண்,பெண் இருவருமே சுயஇன்பத்தில் ஈடுபடலாம். சுயஇன்பம் காண செக்ஸ் பார்ட்னர் என்று யாரும் தேவையில்லை.


சுய இன்பம் நல்லதா கெட்டதா?  என்பது குறித்து தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் சொல்கிறார் சித்த மருத்துவர் யோக வித்யா.


மருத்துவ ரீதியாக சுயஇன்பம் இயற்கையானது. ஆனால் இது கலாச்சார ரீதியாக, செய்யக்கூடாத ஒன்றாக பார்க்கப்படுகிறது.இதனால் பலரும் மிகுந்த குற்ற உணர்ச்சி, அவமானம் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் சுய இன்பம் செய்யும் யாரும் எந்தவித எதிர்மறையான எண்ணங்களுக்கு ஆளாக வேண்டாம். எவ்வித குற்ற உணர்வும் வேண்டாம்.


பொதுவாக பல்வேறு காரணங்களுக்காக பலர் அதிகமுறை சுய இன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா? என்ற கேள்வியையும் எழுகிறது. திருமணத்திற்கு பின் இது சிக்கல்களை ஏற்படுத்துமா? என்ற அச்சமும் பலருக்கு உள்ளது. அவர்களான பதில், எதுவும் அளவோடு இருந்தால் நல்லது.  அளவுக்கு மீறினால் பிரச்சனைதான்.  மற்ற எல்லா வகையான போதைப்பொருட்களையும் போலவே, இது உற்பத்தித்திறன் குறைவதற்கும், உறவுகளுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்திற்கும் வழிவகுக்கும். இதற்கு அடிமையாகிவிடக் கூடாது. இப்படி சொன்னதும் உடனே சுய இன்பம் கெட்டது என்று முடிவு செய்ய வேண்டாம். சுய இன்பத்தால் ஏற்படும் குறைவான பாதிப்புகள் இருக்கின்றன. இதற்கு அடிமையாவதால் முதுகு வலியை ஏற்படுத்தலாம்.


சுயஇன்பத்தினால் ஏற்படும் நன்மைகள் :



  • சுயஇன்பத்தால் மனச்சோர்வு குறைகிறது.

  • சுய இன்பத்தில் ஈடுபடுவதன் மூலம் நம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும் என்றும் சொல்கிறார்கள்.

  • சுய இன்பம், பரஸ்பர சுயஇன்பம் கர்ப்பம் மற்றும் பாலியல் நோய்த்தொற்றுகளைத் (STIs) தவிர்ப்பதற்கான நல்ல வழிகள்.

  • இது அடிப்படையில் உங்கள் உடலைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு வழியாகும். இதன் மூலம் உங்கள் பாலியல் தேவைகள் மற்றும் ஆசைகள் என்ன என்பதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.

  • சுயஇன்பம் மிகவும் மகிழ்ச்சிகரமானது.


பெண்கள் சுய இன்பம் செய்வதில் எந்த தவறும் இல்லை. பாலியல் உணர்வுகள் என்பது இரு பாலினத்தவர்களுக்கும் பொதுவானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மன அழுத்தம் நீங்க சுய இன்பம் வழி அல்ல.  அளவான சுய இன்பமே ஆரோக்கியமானது.  யோகா, தியானம், மூச்சு பயிற்சி, மசாஜ் போன்றவைகளும் மன அழுத்தத்தைத் தீர்க்கும்.