இரத்தத்தில் சர்க்கரையில் அளவு  அதிகரிப்பது தான் நீரிழுவு நோய் . சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மருத்துவ வளர்ச்சியில் பல மருந்துகள் கண்டுபிடிக்க பட்டாலும், பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு உணவு கட்டுப்பாடு தான், நீரிழிவு வராமல்  தடுக்கும் எனவும், இந்த நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் எனவும் கூறுகிறது.


 நீண்ட நாள் உணவு மாற்றம் மற்றும் வாழ்வியல்  முறை மாற்றம் கட்டாயம் தேவைப்படும். உணவு  வரிசையில், பாதம் பருப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம் பருப்பை தினம் உணவில்  சேர்த்து கொள்வதன் மூலம், நீரிழிவு நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என ஆராய்ச்சி கூறுகிறது..


பாதாம் பருப்பில் இருக்கும் ஊட்டச்சத்துகள்


ஒரு கையளவு பாதாம் பருப்பில் 161 கலோரிகள், நார்சத்து - 3.6கிராம், - புரதம் - 6கிராம், கொழுப்பு - 1 கிராம்  (நல்ல கொழுப்பு ) , 37% விட்டமின் E  சத்துகள் நிறைந்து இருக்கிறது.


மும்பையில் நடந்த ஆய்வில்,  இரண்டு குழுவாக பிரித்து, பாதாம் பருப்பு எடுத்து  கொள்பவர்கள் ஒரு குழுவாகவும், பாதாம் பருப்பு எடுத்து கொள்ளாதவவர்கள் ஒரு குழுவாகவும் பிரித்து ஆய்வுகள் நடத்தப்பட்டது. இதில், பாதாம் பருப்பு எடுத்து கொள்பர்களின், உடல்  எடை, இடுப்பு சுற்றளவு, வெறும் வயிற்றில் எடுக்கும் சர்க்கரையில் அளவு, உடலில் கேட்ட கொழுப்பு என பல்வேறு அளவுகள் எடுக்கப்பட்டதில், நல்ல வித்தியாசம் தெரிந்தது. இந்த ஆய்வில் முடிவில், தினம் உணவில் பாதம் பருப்பை எடுத்து கொள்ள வேண்டும்.


பாதாம் பருப்பு, இன்சுலின் சுரப்பை அதிகப் படுத்திகிறது. இன்சுலின் அதிகமாக சுரந்தால், இரத்தத்தில் சர்க்கையின் அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் ப்ரீ டயாபடீக்  இருப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டுடன் பாதம் பருப்பை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையில் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்


பாதாம் பருப்பை எடுத்து கொள்வதில்  பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இதை எப்படி சாப்பிடுவது என பல சந்தேகங்கள் இருக்கும்.ஊறவைக்கலாமா ,வேணாமா இப்படி பல கேள்விகள் வரும்.





  • ஒரு நாளைக்கு 8 - 10 எண்ணிக்கை (ஒரு கையளவு ) பாதம் பருப்புகளை எடுத்து கொள்ளலாம்

  • இரவில் நீரில் ஊறவைத்து, காலை தோலை நீக்கி விட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.

  • உப்பு சேர்த்து வறுத்த பாதாம்பருப்புகளை தவிர்க்க வேண்டும்.

  • பாதாம்பருப்புகளை தேனில் ஊறவைத்து எடுத்து கொள்ள கூடாது


நன்மைகள்





  • இதில் உடலின் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

  • புரத சத்து நிறைந்து  இருப்பதால்,குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் எடுத்து கொள்ளலாம்.

  • உடல் எடையை குறைக்க உதவும்.

  • வைட்டமின் E சத்து நிறைந்து இருப்பதால் தோல் ஆரோக்கியத்தை பாதுக்காக்கும்.