இன்ஸ்டாகிராமில் பாலியல் கல்வி தொடர்பாக தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர் டாக்டர்.க்யூட்ரஸ். அவரிடம் ஊடகம் ஒன்று செக்ஸ் தொடர்பாகக் கேட்ட கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்.
1. பாதுகாப்பான உடலுறவு என்பது கருவுறுதலில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதற்கு மட்டுமே என்பது உண்மையா?
பாதுகாப்பான உடலுறவு என்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். சில சமயங்களில் நமது முழு கவனமும் கருவுறுவதைத் தவிர்ப்பதில் இருக்கும். மேலும் நமது பிறப்புறுப்புகளில் இந்த தொற்றுகள் என்னமாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இதனால் மறந்து விடுகிறோம். அதற்காகத்தான் பாதுகாப்பான உடலுறவு வலியுறுத்தப்படுகிறது.
2. பிறப்புறப்பு ரீதியான உடலுறவுக்கு மட்டுமே ஆணுறைகள் தேவை என்பது உண்மையா?
ஆணுறைகள், ST களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் என்பதால் இவை பிறப்புரீதியான உடலுறவு மட்டுமல்லாமல் ஆனல், ஓரல் என அனைத்து வகையான உடலுறவுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.ஆம், ஆணுறைகள் வாய்வழி உடலுறவுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
3. கருத்தடை மாத்திரைகள் உடலுக்கு மோசமானவை என்பது உண்மையா?
வாய்வழி கருத்தடை மாத்திரைகள் அல்லது வழக்கமான ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். அவற்றால் மாதவிடாய் சீராகிறது, சருமத்தை தெளிவாக வைத்திருக்கின்றன, கடுமையான மாதவிடாய் கால வயிற்று வலியைக் குறைக்கின்றன, மேலும் சில வகையான புற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றன. இருந்தாலும் நிச்சயமாக, அதைப் பெறுவதற்கு முன் உங்கள் மகளிர் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது மிக அவசியம்.
4. பிறப்புறுப்பு வழியான உடலுறவின் வழியாகப் பெண்கள் உச்சமடைய முடியும் என்பது உண்மையா?
75 சதவிகிதப் பெண்கள் பிறப்புறுப்பு வழியான உடலுறவின் வழியாக உச்சமடைய முடிவதில்லை எனத் தெரிவிக்கின்றனர். காரணம் ஆணுறுப்பைப் போல பெண்ணுறுப்பு இருப்பதில்லை. உச்சமடைவது கிளிடோரிஸ் வழியாகத்தான் நிகழ்கிறது. அது பிறப்புறுப்பு ரீதியான உடலுறவால் சாத்தியப்படுவதில்லை.
5. உடலுறவில் மகிழ்ச்சி கிடைக்க உங்கள் ஜி-ஸ்பாட்டை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது உண்மையா?
சிலருக்கு ஜிஸ்பாட் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதுமட்டுமில்லாமல் சிலருக்கு பெண்ணுறுப்பின் உட்பகுதிகளிலும் சில உணர்திறன் இருப்பதால் அந்தப் பகுதிகளில் உடலுறவின்போது இயங்குவதனாலும் மகிழ்ச்சி கிடைக்கப்பெறுகிறது.அதனால் ஜிஸ்பாட்டை மட்டுமே நோக்கி உடலுறவு இருக்க வேண்டாம்.
6. உங்கள் பிறப்புறுப்பில் இருக்கும் முடி நல்லதல்ல அது வாக்ஸ் செய்யப்பட வேண்டும் என்பது உண்மையா?
அந்தரங்க முடி ஆரோக்கியமானது மேலும் வெளிப்புற உராய்வில் இருந்து அது உங்கள் பிறப்புறுப்பைப் பாதுகாக்கிறது. வாக்ஸிங் ஆரோக்கியமான முறையல்ல. உங்கள் பிறப்புறுப்பு முடிகளை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் அதனைச் சுத்தப்படுத்திப் பராமரித்து வந்தாலே போதுமானது.