வேகவைத்த எலுமிச்சை பழத்தை நம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். மேலும் இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் வேகவைத்த எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் நன்மைகள் குறித்த அறிவியல் ஆய்வுகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இயற்கையாகவே எலுமிச்சையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால் அவற்றை வேகவைப்பதால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அளவு குறையலாம். இருப்பினும் வேகவைத்த எலுமிச்சையின் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
சரும பாதுகாப்பு:
எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளதால் அது சருமத்திற்கு மிகுந்த நன்மையளிக்கும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தில் உள்ள செல்களை டேமேஜ் ஆகாமல் பாதுகாக்கும். அதனால் வயதான அறிகுறிகளை குறைக்க முடியும். வைட்டமின் சி உட்கொள்வதால் சருமம் மிகவும் வேகமாக குணமாகும் என்றும் வடு உருவகுவதை தடுக்கும் என்று ஆதாரங்கள் உள்ளன. இதில் இருக்கும் கொலாஜன் உற்பத்தி சருமத்திற்கு உறுதியான தோற்றத்தை கொடுத்து கோடுகள், சுருக்கங்கள் இன்றி பாதுகாக்கும்.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்:
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் எலுமிச்சையில் உள்ளதால் அது மிகுந்த நன்மை அளிக்கும். தினசரி எலுமிச்சை சாறு குடிப்பதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் :
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 100 மி.கி உட்கொள்வதை பழக்கமாக்கி கொண்டால் ஜலதோஷம், நிமோனியாவில் இருந்து விடுபடலாம் மற்றும் எதிர்காலத்தில் நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். வயதானவர்களுக்கு வைட்டமின் சி குறைபாடு இருப்பின் எலுமிச்சையை அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளலாம்.

உடல் எடை குறைய:
எலுமிச்சை தண்ணீரில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் அது உடல் எடை குறைப்பதற்கு உதவி செய்யும். சோடா, பழச்சாறு போன்றவைக்கு மாற்றாக எலுமிச்சை தண்ணீர் குடிக்கலாம்.
எலுமிச்சை தண்ணீரில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் அது உடல் எடை குறைப்பதற்கு உதவி செய்யும். சோடா, பழச்சாறு போன்றவைக்கு மாற்றாக எலுமிச்சை தண்ணீர் குடிக்கலாம்.
செரிமானத்தை மேம்படுத்தும்:
அஜீரண தொந்தரவு உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடிப்பார்கள். சிலருக்கு நெஞ்சு எரிச்சலை உணர்கிறார்கள். இருப்பினும் இது எலுமிச்சையால் தான் என்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது. பொதுவாக வெதுவெதுப்பான நீர் குடலை சுத்தம் செய்து வயிற்று போக்கை குறைக்கும்.
எலுமிச்சையை சாறு எடுத்து அதை கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரில் கலந்து குடிக்கலாம். சுவைக்கு தேன் சேர்த்து கொள்ளலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நான்கு துண்டுகளாக்கிய எலுமிச்சையை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டிவிட்டு குடிக்கவும். இப்படி உங்களின் விருப்பத்திற்கேற்ப சாப்பிடலாம்.