உடல் பாசிட்டிவிட்டி நல்லது, ஆனால் ஆரோக்கியமற்ற உடல் இல்லை - ஏன் நாம் இரண்டையும் பராமரிக்கக்கூடாது?


மனிதர்களாகிய நாம், விலங்குகளைப் போலவே இனப்பெருக்கம் செய்கிறோம். முடிவில் அனைவரும் உயிரியல் ரீதியாக, ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்று எடுப்பதர்காக ஆரோக்கியமான நபர்களுடன் இணைய விரும்புவோம். இதனால்தான் 'ஆரோக்கியமான' நபர்களால் நாம் ஈர்க்கப்படுகிறோம். காலம் போக உலகம் மாறிவிட்டது. சமூக வலைத்தளங்கள் வந்து நம்மை மிகவும் பாதுகாப்பற்றவர்களாக உணர வைக்கிறது. ஆனால் நாம் உயிரியல் ரீதியாக கூட்டு வாழ்வையே விரும்புகிறோம்



உடல் பருமன் மற்றும் உளவியல்


தன்னம்பிக்கை இல்லாமை: தினசரி அடிப்படையில் பருமனால் நிறைய பேர் தங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்களிலும் பலவற்றைச் சந்திக்கிறார்கள்.



  • பள்ளியில் கிண்டலை எதிர்கொள்ளல்

  • கவனம் பெறாமை.

  • பள்ளியில் 'ஆல் ரவுண்டர்ஸ்’ மனநிலைக்கான ஏக்கம்.

  • கல்லூரி மாடலிங். அல்லது இன்ஸ்டாகிராம்.

  • வேலை தேர்வு.

  • உறவுகளுக்கான 'பார்ட்னர் தேர்வு'


                  


பாதுகாப்பின்மை: நம்மில் நிறைய பேர் (அனைவரும் அல்ல), பருமனான நபர்கள், நம் இடத்தை அழகாக இருக்கும் யாரோ ஒருவர் வந்து இடத்தைப் பிடித்துவிடுவாரோ என்று   பாதுகாப்பின்மையை உணர்கிறோம். அந்த பாதுகாப்பு ஒரு பேரிய தேவையாக உள்ளது.


மற்றவர்கள் கருத்துக்கு பயந்து: மனிதர்களாகிய நாம் பிறர் நம்மைப்பற்றி என்ன நினைகிறார்கள் என்ற தொடர் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மற்றவர்கள் வாழ்க்கையிலும் நிறைய நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்வதில்லை.




உடல் பருமன் மற்றும் உடலியல்


கொழுப்பு திசு அதிகரிப்பு/எடை அதிகரிப்பு சில மெடபாலிக் பிரச்சனைகளுடன் வருகிறது: வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு, ஹார்மோன் பிரச்சனைகள், உறுப்பு ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள்: மனநலம், இதயம், கல்லீரல், நிணநீர் ஆரோக்கியம் மற்றும் புற்றுநோய் போன்ற சிலவற்றை குறிப்பிடலாம்.


கொழுப்பு செல்கள் 'ஓவர்லோட்' ஆகும்போது வீக்கம் மற்றும் ஐஆர் போன்ற உடல்நலம் தொடர்பான பெரும்பாலான பாதிப்புகள் நிகழ்கின்றன.


ஒருவர் பருமனாக இருந்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் IR இன் விளைவுகளைக், குறிப்பாக நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இணைந்தால் அதைப்பற்றி குறிப்பிட அவசியமில்லை, இது மிகவும் பொதுவானது.


சமூக வலைத்தளங்கள் மற்றும் போலியான உடல் நேர்மறை:


எல்லோரும் சமூக ஊடகங்களில் 'அழகாக' இருக்க விரும்புவதால், சமூக வலைத்தளங்களில் நிறைய பொய்கள் லைக்குகள் வடிவில் நிறைய ஒப்புதல் பெறுகின்றன. மக்கள் ஒரு பொய்யை தோராயமாக லைக் செய்து, பகிர்கின்றனர் மற்றும் மறுபதிவு செய்கிறார்கள்.


தனக்குத்தானே பொய் சொல்வது


அனைத்து 'உடல் பாசிட்டிவிடி ' கண்டண்ட் கிரியேடர்களையும் நான் பாராட்டுகிறேன், ஏனென்றால் அவர்கள் சிறந்த அழகாக உருவாக்குகிறார்கள். ஆனால் உடல் பருமனாக இருப்பது ஆரோக்கியமானது என்று நீங்கள் நினைத்து பிரச்சாரம் செய்தால், அது தவறான தகவல்களின் மொத்தமாக இருக்கும்


பொய்யை பிரச்சாரம் செய்து அதை ஆதரிக்கும் ஒவ்வொருதரும் முன்னேற முதல் படியை எடுக்காமல் இருப்பது அவமானமாகும். இறுதியில், ஒருவர் சமூக வலைத்தளங்களில் வாழாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையை வாழ வேண்டும்.




மாற்றத்தின் முரண்பாடு: பருமனான நபர்கள் தங்கள் ஏற்றுக்கொள்ளல்


போலியான உடல் பாசிட்டிவிட்டியை பற்றி நமக்கு நாமே பொய் சொல்லக்கூடாது. இன்னொரு விஷயம் பற்றி நாம் பொய் சொல்லக்கூடாது


ஒருவன் என்னவாக இருக்கானோ,அதுவாக மாறும்போது மாற்றம் நிகழ்கிறது, அவன் இல்லாததாக மாற முயற்சிக்கும்போது அல்ல. நீங்கள் உங்கள் நிலையை ஏற்றுக்கொண்டு அதில் வேலை செய்யத் தொடங்குங்கள். நீங்கள் அதை மாற்றலாம்.


நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவை



  • நம்மால் மாற்ற முடியாத விஷயங்கள்: மரபியல், உயரம், நிறம், முக அம்சங்கள், எலும்பு அமைப்பு போன்றவை.

  • குண்டாக இருக்கும் உடலை ரசித்துக்கொண்டே, அதிக எடையைக் குறையுங்கள். ஆரோக்கியமாக உண்ணுங்கள். அதுதான் நிஜமான பாசிட்டிவிட்டி