மழை காலம் பெரும்பாலோனோர்க்கு கொண்டாட்டமாக இருந்தாலும், சிலருக்கு இது பிரச்சனை மிக்கதாக இருக்கும். குறிப்பான ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த மழை காலம் வெறுக்க கூடியதாக இருக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும். எந்த பருவ காலமாக இருந்தாலும், உணவில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், உடலில் நோய்கள் வராமல் பார்த்து கொள்ளலாம். பருவ நிலைக்கு ஏற்றாற் போல் நோய்கள் வருவது போல, பருவ நிலைக்கு ஏற்றாற்போல் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.


மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்




சாலையோர கடைகளில் இருந்து உணவுகளை வாங்கி சாப்பிட வேண்டாம். மழை காலத்தில் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது.  உணவுகள் மூலம் தொற்று பரவும். காய்ச்சல் சளி, தொந்தரவுகள் வர வாய்ப்பு இருக்கிறது. உணவு அழற்சி ஏற்பட்டு செரிமான தொந்தரவுகள் வரும்.


தண்ணீர்- வெளி இடங்களில் தண்ணீர் குடிக்க வேண்டாம். பிரிட்ஜில் வைத்த குளிர்ச்சியான நீர் எடுத்து கொள்ள கூடாது. இதனால் தொண்டை கரகரப்பு, இருமல், சளி போன்ற தொந்தரவுகள் வரும்.




காய்கறிகளை பச்சையாக சாப்பிட வேண்டாம். - மழை காலங்களில் பச்சை காய்கறிகள், சாலட் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக காய்களை சமைத்து, சூடாக சாப்பிடுங்கள்.


கடல் வாழ் உயிரினங்கள் - மீன் , நண்டு, இறால் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். இதை எடுத்து கொள்வதால், தண்ணீரில் மூலம் பரவும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்படும்.




மழை காலத்தில் என்ன உணவுகள் சாப்பிடலாம்


பழங்கள் - பழங்களை வாங்கி வெண்ணீரில் சுத்தமாக கழுவி சாப்பிடலாம். பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்து இருக்கிறது.பழங்கள் எடுத்து கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கலாம்.




உளர் பழங்கள் - பாதாம் பருப்பு, வால்நட், பேரீட்சை பழம், அத்தி பழம் போன்ற உளர் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இதில்,  புரதம்,வைட்டமின், ஆண்டிஆக்ஸிடென்ட்கள், ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.


நீர்காய்கள் - சுரைக்காய், வெண்பூசணி, பீர்க்கங்காய் போன்ற நீர்சத்து நிறைந்த காய்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடலுக்கு தேவையான நீர்சத்தை அளிக்கிறது..




சூடு தண்ணீர் - எப்போதும் தண்ணீரை சூடு செய்து ஆற வைத்து குடிப்பது நல்லது. மழை காலத்தில் இப்படி குடிப்பது எந்த தொற்று நோய்கள் வராமல் தடுக்கும். சூடு தண்ணீரில் சீரகம், அல்லது துளசி, அல்லது ஓமவல்லி இலைகள் சேர்த்து குடிக்கலாம். இது செரிமான பிரச்சைனைகள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.