அதிகாலை உடலுறவு... அலாதி தருவது ஏன்? ஆய்வுகளும்...ஆளுமைகளும் சொல்வது இது தான்!

இன்பத்திலும் இம்சையிலும் உதவும் அதிகாலை செக்ஸை, நாடு கடந்து உலகம் கொண்டாடக் காரணம் இது தான். 

Continues below advertisement

தாம்பத்யம்... அது ஒருவிதமான புரிதல். இரு இணைகளுக்கு இடையேயான பந்தம். உடலுறவில் ஜோடிகள் எப்போதும், ஒரே மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பதில்லை. அவர்கள் உணவைப் போல, உடையைப் போல உடலுறவிலும் வித்தியாசம் தேடுகின்றனர். அதன் வெளிப்பாடு தான் விதவிதமான செக்ஸ் முறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவற்றில் ஒன்று தான் அதிகாலை செக்ஸ். இது பெரும்பாலும் ஆத்மார்த்த செக்ஸ் என்று தான் பார்க்கப்படுகிறது. செக்ஸ் பொதுவானது தானே... அதில் என்ன அதிகாலை... என்று தோன்றலாம். ஆனால் அதிகாலையில் அதற்கென சில சிறப்புகள் இருக்கிறது. அதவும் மருத்துவ ரீதியான சில சிறப்புகள்...

Continues below advertisement


நீங்கள் ஓய்வெடுத்து தயாராக இருப்பீர்கள்!

என்ன தான் இரவில் செக்ஸ் வைத்தாலும், அது பகலில் நாம் பட்ட சிரமங்கள், உழைப்பு, அசதி உள்ளிட்டவற்றை கடந்த ஒரு ரிலாக்ஸ் ரகம். அது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கும். அதுவே நீங்கள் இரவு முழுக்க ஓய்வெடுத்து, அன்றைய நாளில் அசதிகளை விரட்டிய பின், மறுநாள் அதிகாலை எழும் போது நீங்கள் இன்னும் ப்ரஷ் ஆக இருப்பீர்கள். உங்கள் இரவு ஓய்வு, மறுநாள் புத்துணர்ச்சியை தரும். இரு இருதரப்பு இன்பத்தையும் உறுதி செய்யும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதனால் தான் அதிகாலை செக்ஸ்... அலாதி இன்பம் தருகிறது என்கிறார்கள் வல்லுநர்கள். 

ஹார்மோன்கள் அதிகம் இயங்கும்!

எப்படி உங்கள் இரவு உறக்கம் உங்களுக்கு உடல் ரீதியான தெம்பை தருகிறதோ... அதே போல் தான் அதிகாலையில் ஓய்வுக்கு பின் உங்கள் ஹார்மோன்களின் செயல்பாடும் இருக்கும். அவை அதிகம் இயங்கும். உங்கள் இயக்கத்திற்காக காத்திருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் செக்ஸில் ஈடுபடும் போது, நீங்கள் இன்னும் பலமானவர்களாக மாறுவீர்கள். பாய்வீர்கள் என்று கூறுவார்களே அப்படி தான். இது வேறு விதமான செக்ஸ் அனுபவத்தை உங்களுக்குத் தரும் என்கிறார்கள் டாக்டர்கள். அதனாலேயே உடலுறவுக்கு அதிகாலை கனக்கச்சிதம் என்கிறார்கள். 

அந்தி நிலையில் மூளை! 

அதிகாலையில் உங்கள் மூளை அந்தி நிலையில் இருக்கும். அதன் இயக்கம், உங்கள் செயலுக்கு ஏற்றவாறு வரும். அது என்ன நினைத்ததோ... அதை நடத்தும். அதுவே உடலுறவுக்கு அலாதி இன்பத்தை தேடும். அப்போது ஆணோ... பெண்ணோ... இன்னும் கூடுதலாக இன்பம் காணவோ, தரவோ உந்தப்படுவர். இது அவர்களின் செக்ஸ் விருப்பத்தை இன்னும் விறுவிறுப்பாக்கும். உங்கள் மூளை முழுவதும் அன்றைய நாளை இன்பமாக தொடங்கும் மனநிலைக்குச் செல்லும். இது புன்னகையான நாளை உங்களுக்குத் தரும். இன்னும் விறுவிறுப்பாக்கும், சுறுசுறுப்பாக்கும். அதனாலேயே அதிகாலை செக்ஸ் வைத்தோர் இன்னும் புத்துணர்வோடு அன்றைய நாளில் இருப்பார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். 


பாலியல் தொல்லையிலிருந்து உதவுகிறது!

இது மிக முக்கியமானது. பாலியல் தேவை அதிகாலையில் நிறைவு பெறும் போது, தேவையற்ற சலனமோ, எண்ணமோ அடுத்தடுத்து மனதில் எழாது. இதனால் அன்றைய நாள் முழுவதும் நமது எண்ணங்கள் பணியிலோ, அல்லது வேறு எடுத்த காரியத்திலே தான் இருக்கும்.  அதனால் பாலியல் தொடர்பான தொல்லைகளிலிருந்து, இம்சைகளிலிருந்து அதிகாலை செக்ஸ் நம்மை காக்கிறது என்கிறது ஒரு ஆய்வு. இப்படி இன்பத்திலும் இம்சையிலும் உதவும் அதிகாலை செக்ஸை, நாடு கடந்து உலகம் கொண்டாடக் காரணம் இது தான். 

Continues below advertisement
Sponsored Links by Taboola