திருமணத்தின்போது  அனைவருமே மிக அழகாகவும். பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். பொதுவாக திருமணம் என்றாலே, புது மணப்பெண்ணின் முகம் மகிழ்ச்சியில்  பிரகாசிக்கும். இந்த முக வசீகரத்தை அதிகரிக்க திருமணத்திற்கு முன்னரே இருந்து புதுமணப் பெண்கள் தயாராகுவார்கள் ,அந்த வகையில் நாம் வீட்டில் இருந்தவாறு எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.


 திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே சருமத்தை பராமரிக்கும் இயற்கை முறையிலான அழகூட்டும் விஷயங்களை தொடங்க வேண்டும்.   திருமணம் என்பது உங்கள் வாழ்க்கையின் மிகமுக்கிய தருணமாகும். அந்த நாளில் மணப்பெண் ஏனையவர்களை விட அழகுடன் ஜொலிப்பது எல்லோராலும் விரும்பப்படுகிறது. அந்த வகையில் மணப்பெண் தனது சரும அழகை மட்டும் அல்லாமல் உடலையும்   எவ்வாறு  சக்தியூட்டி அழகு படுத்துவது என பார்க்கலாம். 


சரியான உணவை உட்கொள்ள வேண்டும்:


திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே மணப்பெண் நன்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உடல் பொலிவை மேம்படுத்தும் உணவுகளை அருந்தத் தொடங்க வேண்டும். முகத்திற்கு ,கை ,கால் தோல்களுக்கு நன்கு பளபளப்பை நல்ல கலரை வழங்கக்கூடிய காய்கறி வகைகளை தேர்வு செய்து ஜூஸ் ஆகவோ அல்லது சூப்பாகவோ சாப்பிடலாம். இதில் அதிகமாக வைட்டமின் டி சத்து அதிகம் உள்ள உணவுகளை மணப்பெண் சாப்பிடும் போது முகம் பளபளப்பாக தொடங்கும். முகத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள், அதிகப்படியான வறட்சி , எண்ணெய் படிவு போன்ற சரும பிரச்சனைகள் இதன் மூலம் சரி செய்யப்படும்.


முகத்தில் இயற்கை முறையிலான பளபளப்பை பெறுவது எப்படி?


மணப்பெண் தனது திருமண நாளுக்கு சில மாதங்கள் முன்பிருந்தே முக அழகை பராமரிக்க தொடங்குவார். அந்த வகையில் சில மணப் பெண்கள் செயற்கையான ஒப்பனை கலைஞர்களின் உதவியை நாடுகிறார்கள், அதேபோல் சிலர் இயற்கை முறையில் தங்களை தாங்களே பராமரித்து முகத்தை பளபளப்பாக அழகாக மாற்றிக் கொள்கிறார்கள்.


ஆகவே இயற்கை முறையில் சரும அழகை பெரும் சில வழிமுறைகளை பார்க்கலாம்:


திருமணத்திற்கு ஒரு நான்கு மாதங்கள் முன்பிருந்தே மணப்பெண் முகத்தை ஃபேஷியல் செய்த செய்ய தொடங்க வேண்டும். தொடர்ந்து வாராவாரம் சரும பராமரிப்பு முறைகளை கையாண்டு ,நன்கு முகத்திற்கு நீர் ஆவி பிடித்து பின்னர் சுத்தம் செய்து  பேசியல் செய்யும் போது முகம் பளபளப்பாக தொடங்கும். இயற்கை முறையிலான ஸ்க்ரப், பேஸ் மசாஜ் போன்றன சருமத்தில் ரத்த ஓட்டத்தை தூண்டி பளபளப்பை அதிகமாகுகிறது. இதனால் முகமும் உடலும் இளமையாகவும் ,பொலிவாகவும் தோற்றமளிக்கும். வீட்டிலேயே இலகுவாக முல்தானி மெட்டி பேசியல், சந்தன பேசியல், ஃப்ரூட்ஸ் பேசியல் போன்றவற்றை செய்யும் போது முகம் எந்தவித பக்க விளைவுகளும் இன்றி பளபளப்பை கொடுக்கும்.


முல்தானி மெட்டி:


மணப்பெண் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய ஃபேசியல் தான் தான் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக். இது முகத்திற்கு இயற்கையான முறையில் ஆரோக்கியம் வழங்கும் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக இருக்கிறது. சில மாதங்களாக தொடர்ந்து இந்த முல்தானி மெட்டி பேசியல் செய்துவர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறைய தொடங்கும். அதேபோல் தோலில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு எண்ணெய் தன்மை நீங்கிவிடும். போதுமான அளவு முல்தானி மெட்டி பவுடர் ,பால், தேன், ரோஸ் வாட்டர் எல்லாவற்றையும் ஒரு பேஸ்ட் ஆக கலந்து முகத்தில்  ஃபேசியல் செய்து வர முகம் பளபளப்பாக மாறும்.


 சந்தன ஃபேஷியல்:


இந்த சந்தன பேசியல் முகத்தினை குளிர்ச்சியாக எப்பொழுதும் வைத்திருக்கும் .அதேபோல் ஒரு ஒளிரும் தன்மை முகத்தில் இருந்து கொண்டே இருக்கும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்ட சந்தனம் முகத்தில் எண்ணெய் சுரப்பை தடுத்து முகத்தில் உள்ள தழும்புகளை சரி செய்யும். நல்ல
சந்தனத் தூளுடன் ,தேன் கலந்து முகத்தில் பூசி வர முகம் பிரகாசமாக காட்சியளிக்கும். மணப்பெண் தனது திருமண நாள் நெருங்கும் வரை இந்த ஃபேசியல் களை செய்து வர பளபளப்பு அதிகமாகும்.


அதேபோல் முகத்தை நன்கு சுத்தம் செய்து தோலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு வால்நட் தூள், தேன் மற்றும் தயிருடன் கலந்து முகத்தை மென்மையான முறையில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு முகத்தை ஸ்கிரப் செய்து   சுத்தம் செய்த பின்னர் பேஷியல் செய்யலாம்.


வைட்டமின்கள்:


மணப்பெண் தனது சருமத்தை சூரிய ஒளியில் படுமாறு செய்வது மிகவும் முக்கியமானது. சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பளபளப்பிற்கும் விட்டமின் சி, டி போன்றவை அதிகளவில் தேவைப்படுகின்றது. சூரிய ஒளி விட்டமின் டி யை இயற்கையான முறையில் சருமத்திற்கு வழங்குகிறது. அதேபோல், மணப்பெண் காலை உணவில்  தானியங்கள், ஆரஞ்சு சாறு மற்றும் தயிர் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். மேலும் சருமத்திற்கு வைட்டமின் சி யை பெற, சிட்ரஸ் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பப்பாளி, தக்காளி, கீரை , மஞ்சள் காய்கறி வகைகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தூக்கம் என்பது மணப்பெண்ணுக்கு இன்றியமையாதது, தினசரி குறைந்தது 6 முதல் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். அப்போதுதான் மணப்பெண் புத்துணர்ச்சியுடன் அழகுடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும். நன்கு தூங்கினால் உடலின் உறுப்புகள் சீராக செயல்பட்டு இரத்த ஓட்டம் நன்கு நடைபெறும். அப்போது இயற்கையாகவே சருமத்தின் அழகு மெருகூட்டப்படும். நன்கு தூங்கி எழும்போது கண்களைச் சுற்றி கருவளையங்கள் வராமல் தடுக்கப்படும். இவ்வாறு உடல் மற்றும் முகத்தை பராமரித்து வந்தால் திருமண நாளில் மணப்பெண் ஒரு அழகு தேவதையாக மிளிர முடியும்